Tuesday, October 29, 2013

தீபஒளி திருநாள் வாழ்த்து கவிதை


மாசடைந்து மனிதர்கள் இழந்து
கந்தல் கொண்டு நிர்வாணம் மறைத்துச்
சாலையில் திரியும்
உன் சக மனிதனுக்கு புத்தாடை கொடுத்து
உன் தீபஒளி திருநாள் வாழ்த்தை தெரிவிப்பாயே யானால்
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன்னொருநாள் சோமபானச் செலவை தவிர்த்து
தாய்மடி காணா தளிர்கள் நிறைந்த
விடுதிக்கு ஏதேனும் செய்வாயே யானால்
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன் வாசல் வந்து நின்று
யாசகம் கேட்டு நிற்கும்
யாரோ ஒருவருக்கேனும்
தீபஒளி திருநாள் இனிப்புடன்
சுயமரியாதையையும் கற்பித்து
அனுப்புவாயே யானால்
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன் பெற்றோரை விடுதிக்கு அனுப்பிவிடாமல்
வீட்டில் வைத்து கொண்டாடுவாயே யானால்
ஒவ்வொரு நாளும் உனக்கு தீபஒளி தான்.
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன் அழகைக் காட்டும் புத்தாடைக்கும்
தீபஒளி திருநாள் வாழ்த்து.

பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான உடையணிந்து
தூர நின்று பத்திரமாக கொளுத்துவாயே யானால்
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன் நாவை இனிக்கச்செய்யும்
இனிப்புக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன்னை குடும்பமாக சேர்த்த இந்த நாளுக்கும்
தீபஒளி வாழ்த்து.





8 comments:

  1. ஒவ்வொன்றும் சாட்டையடி வரிகள்...

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றியும்,வாழ்த்துக்களும் சார்.

    ReplyDelete
  3. கவிதை அருமை... நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி சார்... உங்களது மின்னஞ்சலுக்கும் அனுப்பியிருக்கிறேன்.

    ReplyDelete
  5. மனிதம் மெலிந்துவிட்ட இந்நாளில் உங்கள் கவிதை அந்த மனிதத்தை நினைவுபடுத்துகிறது. நல்லதொரு ஆக்கம்.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
    தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி ரஞ்சனி மேம்.

    ReplyDelete
  7. வணக்கம்

    தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

    போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

    என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்...சிறந்ததொரு பனி உங்களது.

      Delete