Tuesday, November 30, 2010

அம்மா.

அம்மாமுக்கி முட்டி அவள் என்னை புறந்தள்ளியிருக்கையில்
என் எடை என்னவோ மூன்றே கிலோதான்இந்த மூன்றிற்கா முன்னூறு நாட்கள் !!

சொகுசாய் சொக்கி , கூனிக்கிடந்த என்னை ...
கட்டாயமாக முதல் முறையாய்
அவளிடமிருந்து பிரித்துவிட்டிருந்தாள் ...

அவளுக்கு வலித்திருக்கும்
நமக்கும் வலித்திருந்ததால்.

வலிதான் வாழ்க்கை என்றுஅன்றே வழிகாட்டி உணர்த்திவிட்டிருந்தாள் .

தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டபோது
இரண்டாம் முறை அவளிடமிருந்து
என்னை பிரித்துக்கொண்டள் !!

தாய்ப்பால் நின்றபோது
மூன்றாம் முறை பிரித்துவிட்டிருந்தாள்

தவழ்ந்து, தத்தி, தத்தி நடக்கையில்
நானே அவ்வப்போது அவளை பிரிந்துவிட்டிருந்தேன் !!

வலுக்கட்டாயமாக வகுப்பறைக்கு தள்ளியபோது
கட்டாயமாக நான் மறுத்தும் பிரிந்திருந்தது நான்காம் முறை...

பருவம் தொட்டபோது இருவருமே ஒருவரை ஒருவர்
பிரிந்திருக்கவே முற்பட்டிருப்போம் காலத்தின் கட்டாயம்
ஐந்தாம் முறை ...

அவளுக்கே சொந்தமான பாசத்தை
மாற்றாருக்காய் பங்கிட்டுக்கொடுக்கையில்
முதிர்ச்சியுற்றிருந்தாலும் ஆறாம் முறை
அழுதிருப்போம் இருவரும் ...

காலம் அவளிடமிருந்து என்னை பிரிக்க
அவள் கட்டாயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறாள் ...

வலிதான் வாழ்கை என்று கற்றுக்கொடுத்தவள் ...
வாழ்வதற்கான வழியையும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் ...

நிரந்தர பிரிவிற்க்காய் காத்திருக்கிறோம்...

Saturday, November 13, 2010

அவ்வப்போது நான் கிறுக்குவது ....

தோற்க்கடிக்கப்பட்டவன்...யாரால்?


தெரியவில்லை....


இருப்பினும் போராட்டத்தை வெற்றிநோக்கி....


இழுத்துச்செல்பவன் அல்ல.... தள்ளிச்செல்பவன்......


தோல்வி தான் வெற்றிபெறும் என்று தெரிந்தே.........


()()()()()()


நான் நல்லவர்களாக அடையாளம் காணப்பட்ட யாவரும்


பிறராலேயே எனக்கு பரிட்சயமானவர்...


()()()()()()


நல்லவங்களா !! யாரு !!

அப்படியெல்லாம் யாருமே கிடையாது .

நீங்க வேற....


நல்லவங்கனு சொல்லிக்கிறோம்...


கெட்டவங்களை


சுட்டிக்காட்டுகிறோம்..


அம்புட்டுதேன்... ( 1, 2 பேரு இருக்கலாம். )


()()()()()()


விவாதம் செய்யப்படும் கருத்து எதுவாயினும் விவாதத்தோடே நின்றுவிடுகிறது ...


நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது ......


()()()()()()


தினசரி நாள்காட்டி ::


தினம் தினம் பிறந்து


தினம் தினம் இறக்கிறேன் .....


()()()()()()


கால் தடங்கல் தீட்டிய அற்புத ஓவியங்கள் என் வீட்டு தரையில்........


()()()()()()
 
என்னை யாருக்கும் தெரியாது ................


ஆனால் எல்லோருக்கும் தெரியும்..................


()()()()()()


வாழ்கை என்னும் புத்தகம்..


ஒவ்வொருவருக்கும் ..


ஒவ்வொருவகையான பாடத்தை படிக்க.


கட்டாயப்படுத்திவிடுகிறது..


()()()()()()


சிந்தித்து படைத்தல் வேண்டும் ..


பிறர் சிந்தித்து படைத்ததை படைத்தல் ( திருடுதல்) கூடாது.....


()()()()()()


இதை செய்யலாம் , அதை செய்யலாம்,


இப்படி செய்யலாம் , அப்படி செய்யலாம் ,


என அலைக்கழியும் மனதிற்கு .


எதை செய்தாலும் நிறைவதில்லை...


()()()()()()


எனது வளர்ச்சியும் , படைப்புகளும்


பிறரால் அவமானப்படுத்தப்படும்போதும் , கேலி செய்யப்படும்போதும் .


எனது தன்னம்பிக்கையும் , உழைப்பும் புதிதாய் கருவாகிறது..


()()()()()()


காலில் விழ வைப்பவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை...!!


அகவை அதிகமாயிருந்தும் காலில் விழுபவர்களுக்கு சுயமரியாதை இல்லை.!!
 
  ()()()()()()
 
தவறாகிவிடும் ......... வேண்டாம் ............ என முடிவெடுத்த சில காரியங்கள் .


கனப்பொழுதில் கை நழுவி விடுகிறது...
 
  ()()()()()()
 
 பத்து வயதில் பறிகொடுத்த தந்தையின் சேமிப்பு பற்றி


துக்கம் விசாரிக்கிறான் உறவினன் ....


()()()()()()


தயிர்கார அம்மா தன் தலையில் சுமந்து செல்கிறாள் ...


பெப்சி, கோக் , பாண்டா, பாட்டில்களில் தயிர், மோர் நிரப்பியபடி....

()()()()()()


கண் மூடிய சிறிது நேரத்தில் .


மனம் மட்டும் ஊர்சுற்றிக்கொண்டும் ...


ஊர் நியாயம் பேசிக்கொண்டும்..........


()()()()()()


பிறந்து சில திங்களே ஆன !


அந்த பொக்கை வாய் புன்னகைக்கும் !!.


அகவை காரணமாக சுருங்கிய தோலுடன்


காலனின் அழைப்பிற்காக காத்திருக்கும் !


அந்த பொக்கை வாய் புன்னகைக்கும்தான்


எத்தனை.. எத்தனை....அடடா!!! ..


()()()()()()

ஆழ்கடல் நிசப்தம் சூழ்ந்த நடு இருட்டில்


காலக்காட்டியின் நொடி எழுப்புகிறது நெடிய சப்தம் ...


()()()()()()


ஒரு நாள் மட்டும் ஆசை ஆம் :


பிறவிக்குருடனாயிருக்க....


ஒரு நாள் மட்டும் ஆசை !!


பிறவிச்செவிடனாயிருக்க.....


ஒரு நாள் மட்டுமே ஆசை !!


பிறவியில் ஊமையாயிருக்க .......


ஒரே ஒரு நாள் மட்டுமே ஆசை !!


ஒரு நாள் போதும் ......


ஆம் ஒரே ஒரு நாள் மட்டுமே போதும் .....


வேறெப்படி விவரிப்பேன்


நான் கண்ட கனவுகளை !!!..
 
()()()()()()
 
சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட தட்டான் பூச்சி .....


உயிரற்ற உடலாய் "சிறகுகளை விரித்தபடி" மண்ணில்......


()()()()()()


ஊமை அறியாத மொழியாய் ! வார்த்தையாய், !!

குருடன் அறியாத காட்சியாய் ! பிம்பமாய், !!


செவிடன் அறியாத ஓசையாய் ! வசையாய் !!


வலியவன் கூட்டம் வீதியில் ஆட்கொள்ளும் .


வக்கிரமங்களையும் .... அக்கிரமங்களையும் கண்டு !!!!!!!


()()()()()()


தன் வாழ்நாள் முழுவதும் சமூகநலனை பார்த்தவன் ..


வாழ்நாள் இல்லாதபோது எப்படிப்பார்ப்பது ?


என எண்ணிப்பார்த்தான்!!!!!!!!!


கண் தானம் செய்தான் .......


()()()()()()


கண் தானம் கடைசி ஆசை..


உயிர்வீழந்த அடுத்த ''பல'' நிமிடங்கள் காண ஆசை !


எண்ணின் வீழ்ச்சி செய்தி கேட்டு அதிர்ந்த உள்ளங்கள் காண ஆசை !!


எனக்காக கண்ணீர் வடிக்கும் உள்ளங்களுக்காக ....


வீழ்ந்தும் நான் கண்ணீர் வடிக்க ஆசை !!


ஆகவே .. வீழ்ந்த பின் என் கண்ணை தானம் செய்துவிடுங்கள்...

()()()()()()

கனவுகளற்ற நினைவுகளையும் , இரவுகளையும்..கனவிலும் கடக்க இயலாதவர்களாய் நாம் !!!


()()()()()()
தவறு செய்துவிட்டு உதாரணங்களை உதாரணங்களாக காண்பித்து தற்காலிகமாக மட்டுமே தப்பித்துவிடமுடியும் ......


()()()()()()

தன் இருப்பை காட்டிக்கொள்ளவா அத்துனை செயல்களும் !!! ?

()()()()()()


அடுத்தவர் ஆயுள் ரேகை பார்த்தே தன் ஆயுளை கழிக்கிறான்.....

கைரேகை பார்ப்பவன்.....

()()()()()()

எனக்காக நீ செய்யும் உதவி தன்னலம் சாராமலும் , சுய விளம்பரம் இல்லாமலும் இருந்தால் தான் அதை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியும்......


()()()()()()

முப்பது வருடங்களாக பூவிற்கும் பாட்டி தன் வாழ்க்கையில் கடந்த தூரம் என்னவோ முலம் அளவுதான் ......

()()()()()()

‎(இ) துவுமே (இ) ல்லாத (இ) ராவான (இ) ரவா (இ) ருக்கு (இ) ன்னிக்கு...

()()()()()()
சுடுபவர்களை கண்டால் ''சுடனும்'' போல் தோன்றுகிறது .............

()()()()()()

20/10/2010 கனவு கண்டேன் .......


21/10/2010 அன்று, 20/10/2010 அன்று கண்ட கனவை தொடர்ந்தேன் ........

22/10/2010 அன்று, 23/10/2010 அன்றைய கனவின் முதல் பாகம் தொடர்ந்தேன் ...........

23/10/2010 அன்று, 22/10/2010அன்றைய ''கனவினை கனவில் கண்டேன்'' ............

24/10/2010 அன்று, 25/10/2010 ''காணக்கூடிய கனவினை கனவில் கண்டேன்'' ...........

25/10/2010 அன்று காணவேண்டிய கனவினை,.... 25/10/2010 ''அன்றைய கனவிலேயே கண்டேன்'' .............
()()()()()()

கனவு காணப்போகிறேன்....

நேற்றைய கனவை இன்று தொடரப்போகிறேன் ....

நாளைய கனவின் முதல் பாகம் இன்று தொடர்கிறேன் ...

நேற்றைய கனவினை இன்றைய கனவில்  காணப்போகிறேன் ...

நாளைய கனவினையும் இன்றைய கனவிலேயே காணப்போகிறேன்...

இன்றைய கனவினையும் இன்றைய கனவிலேயே காணப்போகிறேன்.......

()()()()()()

உடலுறுப்புகளில் குறை என்றால் ஊனம்...

மிகை என்றாலுமா ?

()()()()()()

மஞ்சள் பூசிக்கொண்டது கைம்பெண்கள் உடுத்திக்கொள்ளும் உடைகள் மட்டும்............

()()()()()()

சிறுவயதில் கீதமாய் ஒலித்த "பட்டாசு சத்தம்" "இன்று" காதை கிழிக்கையில் ....

பெரியவர்கள் அன்று "திட்டியபோது'' எரி(றி)ச்சலூட்டிய "சத்தம்" இன்று கீதமாய் என்னால் "ஒலிக்கப்பார்கிறது" ....

()()()()()()

வெளிவர மறுக்கும் வார்த்தைகள் மலடாயினும் ..

கருவுற்றிருக்கிறது கருத்துக்கள் நமக்கு............

()()()()()()

"ஜிண்டாக்" போட்டுப்பார்த்தேன் சீக்கிரமே ஆறிவிடுமென்று !!

"ஒமிப்றஜோல்" போட்டுப்பார்த்தேன் ஒரேயடியாய் ஆறிவிடுமென்று !!

பிரச்சினையே வேண்டாமென்று "பேன்டப்பிரஜோல்" போட்டுப்பார்த்தேன் !!

ஆறலையே !! ஆறலையே !! வயிற்றுப்புண் ஆறலையே !!

மாறலையே !! மாறலையே !! கலப்படம் இன்னும் மாறலையே !!.....

ஒரு வேலை மாத்திரையிலும் கலப்படமோ !!!!!

இல்லை காலாவதியோ !!!

()()()()()()

நயவஞ்சகனை நாம் வெற்றிகொள்ள நேர்மையும் உண்மையும் போதுமா?

நயவஞ்சகனை வெற்றிகொள்ள நாம் எடுக்கும் எந்த முயற்சியும், செயலும்,

நடவடிக்கையும். நேர்மையானதே!,உண்மையானதே!!.

()()()()()()

கனவு காணலாமென கண் மூடினேன் ...


பொல பொலவென பொழுது விடிந்தது கனவின் துவக்கத்தில் ....


கனவு களைந்த தருணத்தில் கண் விழித்தேன் ....

இப்பொழுதும் பொல பொலவென பொழுது விடிந்திருந்தது ........

()()()()()()

இரண்டாம் (2G)"தலைமுறை "அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கொள்ளை ...

"பத்து தலைமுறைக்கு" சுகபோக வாழ்விற்கான "ராச" ஒதுக்கீடு ....
ஒதுக்கியவர் சொன்னார் முன் தலைமுறை செய்ததை செய்தேன் என்று ..!!
தலைமுறை தலைமுறையாய் கொள்ளை...
தலைமுறை தாண்டியும் கொள்ளை ...?
எண்ணிப்பார்த்தால் அலை அலையாய் பாய்கிறது கோபம் ...
சிந்தித்தால் சுனாமியாய் சீறுகிறது கோபம் ...
அலை அலையாய் பாய்ந்த கோபம் பதுங்குகிறது ..
சுனாமியாய் சீறிய கோபம் சிணுங்குகிறது ...
நம் தலைமுறை எண்ணி ....
எத்தனை தலைமுறைக்கு தொடரும் இந்த கொள்ளை "கொள்கை"..
அடுத்த தலைமுறைக்கும் .. !!?
படித்த தலைமுறைக்கும் ..!!?
யாருக்கெல்லாம் ஒட்டிக்கொள்ளுமோ !!! இந்த கொள்ளை கொள்கை ....
வருங்கால தலைமுறை விழித்துக்கொண்டால் ....
அவர்கள் "தலைமுறை" சிறக்கும் ........

()()()()()()

என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட உதவி உன்னை ஊமையாகவும் , அடிமையாகவும்
அடையாளம் காட்டுகிறது எனக்கு ..


()()()()()()

கத்தியால் குத்தியவனுக்கு உயிர் தான் முக்கியம் !!


குத்துப்பட்டவனுக்கும் தான் !!


()()()()()()

குழப்பி சரியாய் பேசுவதில் தெளிவாய் பேசுபவன் ......

()()()()()()


காதல் கவிதைகளுக்கு வரிகள் கொடுக்க முயற்ச்சித்து
வெற்றி பெற முடியாதவனாய் !!
வராத காதல் போல் வரிகளும் !!
காதலிக்க "வழிகள்" இருந்திருந்தால் வரிகள் வந்திருக்குமோ ?
காதலித்த "வலி" இருந்திருந்தால் கூட வந்திருக்குமோ ?
காதலித்தவர்கள் "வழி" செல்லாததால் வரவில்லை போலும் !!
காதலித்தவர்கள் "வலி" தெரியாததாலும் வரவில்லை போலும் !!
"இங்கே" வரிகளும் காதலாய் "அவனுக்கு" !!
ஓஹோ !! இது கூட காதல் கவிதை தானோ ?
வராத காதலுக்கு .....................

()()()()()()

நாற்பத்து ஒன்பதாவது சதம் அடித்தபோது ...

ஐம்பதாவது சதத்தை நழுவவிட்டவர் ..!!
நழுவ விட்ட சதத்தில் !!
எத்தனையாவது நழுவ விட்ட சதத்தை பூர்த்தி செய்யும்போது
ஐம்பதாவது சதத்தை பூர்த்தி செய்வார்...... ?

()()()()()()

இணையத்தில் இலவசமாய் கிடைத்த விண்ணப்பத்திற்கு ..
முகமறியாமல் அறிமுகமாகவிருக்கும் நட்பிற்க்குண்டான..
ஐந்தாயிரம் பக்கங்களைக்கொண்ட முகப்புத்தகமும் இலவசமாய் கிடைத்தது !!
நான் புரட்டிய "நானூற்று நாற்பத்து நான்கு" பக்கங்களில் ..
கிழித்தெறியப்பட்ட பக்கங்கள் "நான்கு" மட்டுமே !!
எஞ்சியிருக்கும் முகவரியற்ற பக்கங்களையும் படிக்கவிருக்கிறேன் !!
இனி ஒரு பக்கத்தைக்கூட கிழிக்க விரும்பாமல் ....
எந்த பக்கங்களும் என்பக்கத்தை கிழித்துவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும் ..
நானூற்று நாற்பத்து நான்கு பக்கங்களிலும் நான் படித்து கற்றது ஏராளம் !!
கிழித்தெறியப்பட்ட நான்கு பக்கங்களிலும் நான் கற்றது ஏராளம் !!
இதை என் பக்கம் உணர்த்துகிறது .....

()()()()()()

இரவும் இல்லை ...


பகலும் இல்லை !

இருட்டவிருக்கும்

இரவுமில்லை !

விடிதலுக்குமுன்னுள்ள

இரவுமில்லை !

இருட்டவிருக்கும்

இரவிற்க்குமுன்னுள்ள

பகலுமில்லை !

விடிதலுக்குபின்னுள்ள

பகலுமில்லை !
 
()()()()()()

 எட்டுக்கால் பூச்சிகள்.....


எந்த மூலையில் வீ(கூ)டுகட்டினாலும் துரத்துகிறார்கள் ..

எட்டுக்கால்கள் என்பதாலேயோ என்னவோ !!!!

()()()()()()

மனித ஆர்கனின் முதல் குற்றவாளியான மூளையே ..


உன்னை திருத்திக்கொள்ளவும் தண்டித்துக்கொள்ளவும் உன்னால் மட்டுமே முடியும்........

()()()()()()

கழுவிவிட்டது மழை !! வாகனங்களையும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் முதலாளிகளின் கல்லாவையும் ......


()()()()()()
 
நாடு இருட்டின் இரண்டாம் பாகமும் ! கடலின் கால் பாகமும் !


தஞ்சையை சுற்றி இரண்டாம் நாளாக இன்றும் !!!
 
()()()()()()

நிஜமும் , நியாமும் இல்லாத


நித்திரை மட்டும்

நிரந்தர எல்லையை

நிர்ணயிக்காமல் !!

நித்தம் பயணிக்கிறது .....

()()()()()()

கிளி ஜோசியம் பார்ப்பவனது கிளி தேர்வு செய்தது ..........


தன் படம் போட்ட அட்டையை !!

()()()()()()

நிஜமும் நியாமும் இல்லாத


கனவு மட்டும் ...

நிரந்தர எல்லையை

நிர்ணயிக்காமல் !!

நித்தம் பயணிக்கிறது !!

கனவில் மட்டும் .........
 
()()()()()()

எதைப்பார்த்தாலும் சரி .......


எப்படிப்பார்த்தாலும் சரி .......

எதையோ பார்ப்பது போல்பார்த்தாலும் சரி ...........

எப்படியோ ...............

என்னைப்பார்,,,,,,,,,,,

()()()()()()

உன்னை உன்னாகவே இந்த உலகத்திற்கு அடையாளப்படுத்திக்கொள்ள
எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று என்னாதே, செய்யவேண்டியதை மட்டும் செய்யத்தவறாமல் இருந்துவிடாதே .........

()()()()()()முகத்துடன் சேர்த்து கர்வத்தையும் காட்டுகிறது கண்ணாடி .........

()()()()()()


வான் வசப்பட்டிருந்த நீர் அவ்வப்போது விடுதலையாகும்போது


விடுதலை தாகம் தீர்ந்த மகிழ்ச்சியில் விரைந்துகொண்டே இருக்கிறது

தடாகம் நிரப்பவும், தாகம் தீர்க்கவும் ,

ஆனந்த கூத்தாட்டத்துடன் மண்ணை முட்ட ......

()()()()()()


சரியாக எடை ஏற்றப்பட்ட வெற்றுத்தராசு நான்...

()()()()()()

பெளர்ணமி பொழுதுகளையும் அமாவாசையாக கழித்துக்கொண்டிருக்கிறோம் ......

()()()()()()

முழைத்த மொட்டு பூத்த தருணத்தில் தானம் செய்துவிடுகிறது தேனை !!
 
()()()()()()

என் கனவு தான் எனக்கே தெரியாத என்னுடைய ரகசியம் என்று !!!


()()()()()()
 
கனவாய்ப்போன கனவை காணப்போகிறேன் ............


()()()()()()

ஆழ்ந்து சிந்தித்த ஏதோ ஒன்று தான் நேற்றைய கனவாக எனக்கு வந்தது முற்றிலும் அதே சிந்தனை எனக்கு கனவாகவில்லை .  கனவில் கூட என்னுடைய அகராதி மூளை சிந்தையை வேறு பக்கம் இழுத்து சென்றுவிட்டது போலும் ..

()()()()()()


பிறரை ஒதுக்கும் குணத்தை மனிதன் மட்டுமே ஆட்கொண்டிருக்கிறான் .

எந்த காரணியாக இருந்தாலும் ஒதுக்குதல் தான் நாம் பிறருக்கு வழங்கும் அதிக பட்ச தண்டனை .....

பிறரை தண்டிக்கும் அதிகாரம் நமதில்லை ...

ஒதுக்குதலைவிட ஒதுங்கி கொள்ளுதல் மேன்மை

ஒதுங்கிக்கொள்ளுதலும் ஒதுக்குதலின் ஒரு அங்கம் தான் .....

முதலில் இதை சொன்ன என்னால் அவ்வாறு இருக்கமுடியுமா என்றால் முடியாதுதான்

இதற்க்கு நான் காரணமல்ல.........

என்னை வளர்த்த, நான் பார்த்து வளர்ந்த சமூகம் தான் காரணம் ............

(யாரங்கே ? முனுமுனுப்பது தன்னுடைய குறையை சமூகத்தின் மீது நான் சுமத்துவதாக ?)

இது தான் உண்மை .......)

()()()()()()

இன்றைய எனது கனவில் மற்றவரது கனவை களவாடப்போகிறேன்........

()()()()()()

கைம்மாறு கருதியே பொழிந்திருக்கிறது வானம் .........

()()()()()()

ஓவ்வொரு பதிலும் பல கேள்விகளை உள்ளடக்கியதே !!!

()()()()()()

பிச்சை காரனுக்கு பிச்சை போட்ட காசை

பிச்சைக்காரன் பிச்சை காசாக நினைத்து
பிச்சை போட்டவனுக்கு திருப்பி கொடுத்த பிச்சை காசை
பிச்சைகாரத்தனமா திருப்பி வாங்கி கொண்டானென்றால்
யார் பிச்சைக்காரன் !!!!!!!
(பிச்சைக்காரன் என்ற வார்த்தை உபயோகத்திற்கு மன்னிக்கவும்)

()()()()()()

நீண்ட நாட்களாக நான் என்னவே என்னாதிருந்த என் பழைய பனி குறித்த கனவு நேற்றைய கனவில் ஒரு தாக்கம் .....

()()()()()()
இருட்டும் கனவும் தான் எனது சிந்தனையும் எழுத்தும் .......

()()()()()()

இனக்கவர்ச்சிக்கு பரிணாம வளர்ச்சி இட்ட பெயர் காதல் !!!


காதலின் புனிதத்தை இனக்கவர்ச்சியில் இருந்து பிரித்துக்காட்டியதும் பரிணாமவளர்ச்சி ...........

()()()()()()
 
எல்லையில்லா இலக்கு .....


நிர்ணயிக்காத எல்லை நோக்கிய பயணம் .......

()()()()()()
 
கண்ணை மூடினாலும் காணமுடிகிறது காட்சியை கனவாக !!!!!!!!!!

()()()()()()

நானே அறிந்திடாத என்னுடைய ரகசியம் தான் எனது கனவு !!

()()()()()()

களைந்த பழைய கனவுகளை கழைய போகிறேன் இன்றைய கனவில் .....

()()()()()()

குட்டி  தூக்கத்தை கூட களவாண்டுவிடுகிறது கனவு ...........

()()()()()()

கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது காலண்டர் .......

()()()()()()

இதுவரையில் நான் கண்ட கனவு எப்படி நிறைவேற வில்லையோ.. அப்படியே இன்று காணவிருக்கும் கனவும் நிறைவேற வேண்டாம் என்ற கனவுடன் .........

()()()()()()

இன்று நான் காணப்போவது வெறும் கனவுதான் ,,,,,,,,,,

()()()()()()

ஆழ்ந்த உறக்கத்தின் விழிப்பிற்கு பின்னால் வந்த கனவு எப்பொழுது வருகிறது எப்பொழுது கலைகிறது என்றே தெரியவில்லை !!!

()()()()()()

ஆழ்ந்த உறக்கத்தை கலைத்த கனவு தன்னையும் கலைத்துக்கொண்டது !!!

()()()()()()

என் நியாயத்தின் நியாத்தை எனது நேற்றைய கனவிடம் முறையிட்டேன் !!!

()()()()()()

நான் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி .......
என்னை நீ எப்படி பார்க்கிறாயோ...
அப்படியே தான் நானும் உன்னை பார்ப்பேன் .
என்னை பத்திரமாக வைத்துக்கொள்வது
உனது திறமை, உனது கடமை !!
உடைத்து விட்டால் மறுபடியும் ஒட்டமாட்டேன் ..........
அப்படி ஓட்டிப்பார்க்க நீ முயற்ச்சித்தாலும்
என்னுடைய பழைய முகத்தை நீயும் .
உன்னுடைய பழையமுகத்தை நானும்
பார்க்கவே முடியாது ............


()()()()()()
எனது நேற்றைய கனவிற்கு விடுமுறை போலும் !!!