Friday, February 12, 2016

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் குறித்து எழுத்தாளர் வா.மு.கோமு

     ஞ்சையிலிருந்து ஐடி கம்பெனிக்கு வேலைக்கு வந்து சேரும் சம்பத் என்கிற வாலிபனின் கதையை முழுமையாகச் சொல்லிச் செல்கிறது நாவல்நாவலில் நண்பர்கள் என்று ஒரே அறையில் தங்கியிருக்கும் சந்துருதிலக்சேகர்பிரபா என்ற நண்பர்களின் வாழ்வியல் சூழல் ஒவ்வொருவரின் பணிகள் என்று விஸ்தாரமாகச் சொல்ல விழைகிறது நாவல்.

ஆனால் சம்பத் என்கிற கதாபாத்திரம் அவர்களை மிஞ்சி நாவலில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு விவரிக்கப்படுகிறதுபோக சலிப்பின்றி நாவல் பின்பகுதியில் தான் சரளமாக செல்கிறதுநாவலாசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆரம்ப தடுமாற்றம் வாசகனை உள்ளிழுத்துக் கொள்வதில் காலதாமதம் ஆகிறதுநாவல் என்றால் அப்படித்தானப்பாஎன்று சொல்வோரும் இங்கு பலருண்டு.

சம்பத் ஆரம்ப அத்தியாயங்களிலேயே விபத்தில் அடிபட்டு மருத்துவமனை கொண்டு சேர்க்கப்படுகிறான்விபத்துகள் சாலையில் நடைபெறுவது இயற்கை சீற்றத்திற்கு ஒப்பானது தான்பின்பாக அவன் வாழ்க்கை முழுதாக விவரிக்கப்படுகிறதுஐடி கம்பெனியில் அமர்ந்து முகநூலில் கவிதை எழுதுகிறான்டிலோனி டிலக்ஸி என்கிற பெயரில் இலங்கை தமிழ்ப்பெண் ‘உங்கள் கவிதை அட்புதம்’ என்று உள்பொட்டியில் பேச வருகிறதுபின்பாக இருவரும் கவிதை பரிமாறிக் கொள்வதாகவும்டாய் டேய் என பேசிக் கொள்வதுமாக நாவல் சுறுசுறுப்படைகிறதுடிலோனி டிலக்ஸியின் வீட்டுப் பெயர் கண்ணம்மாமெதுவாக போனில் பேசிக்கொள்ளும் வரை வருகிறார்கள்.

விபத்தில் சம்பத்துக்கு முதுகுத் தண்டு வடத்தில் முறிவு ஏற்பட்டு நடக்க இயலாதவனாகி விடுகிறான்.மருத்துவமனையில் சமபந்தமாக விவரணைகள் பல சொல்லப்படுகின்றனகண்ணம்மா சம்பத்தை தேடி இலங்கையிலிருந்து வந்து சேர்கிறாள்விபத்திற்கு காரணகர்த்தாவானவர் தன் பெண்ணை சம்பத்தின் வீட்டில் அவரது குற்ற உணர்ச்சிக்காக விட்டு விட்டு செல்ல ஆசை கொள்கிறார். ’அதுக்குத்தான் நான் வந்திருக்கிறன்அந்த இடம் எனக்கு எண்டு அவரிடம் சொல்லி விடுங்கள்’ கண்ணம்மா சொல்லுமிடத்தில் நாவல் நிறைவு பெற்றதாக நான் நினைக்கிறேன்ஆனால் கதை கதையாக மேலும் தொடர்கிறது.

பெரும்பாலும் தமிழில் முந்தைய காலகட்டம் போலில்லாமல் பல வடிவங்களில் நாவல்கள் சொல்லப்படுகின்றன.நாவல் வாசிப்பாளர்களும் எப்போதையும் விட அதிகம் தமிழில் உள்ளார்கள்நாவலாசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் களங்களும் புதிது புதிதாக இருக்கிறதுமொழிபெயர்ப்புகளையே சமீப காலங்களில் வாசித்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த நாவலை வாசித்தது ஒரு புதிய அனுபவம் தான்நாவலில் சில அத்தியாயங்கள் சிறுகதைகளுக்குண்டான நேர்த்தியுடன் சொல்லப்பட்டிருக்கின்றனநாவலாசிரியர் லஷ்மி சிவக்குமாருக்கு எனது வாழ்த்துக்கள்!


இப்படிக்கு கண்ணம்மா (நாவல்விலை 200. பிரதிகள் வேண்டுவோர் பேச : 9994384941


வா.மு.கோமு.
02/02/2016
******

http://vaamukomu.blogspot.in/2016/02/blog-post.html

நன்றி ப்ரதர்

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911


Thanjavur Branch

2 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பரே
  தங்களின் எழுத்துலகப் பயணம் தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் அன்பும் சார்.

   Delete