Saturday, May 15, 2010

என்னைப்பற்றி


திருநாவுக்கரசு சுப்புலக்ஷ்மி இவர்கள் இருவரும், நான், எனதுஅண்ணன், எனதுஅக்கா , எனதுதங்கை , எங்கள் நால்வரையும் இந்த உலகிற்கு கொடுத்தவர்கள் .  எங்களது அண்ணனை நாங்கள் யாரும் பார்த்ததில்லை  காரணம் அவன் இந்த பூமியை பார்க்கும் முன்னரே வானம் தொட்டவன்.   (ஆம் காலன் கொண்டு சென்றிருந்திருக்கிறான்)  தந்தை அரசு போக்குவரத்துக்கழக தொழில் நுட்பப்பணியாளர், தாய் இல்லத்தரசி. 1986 -ம் ஆண்டு வரையில் தந்தையின் பொறுப்பிலிருந்த குடும்பச்சுமையும், பொறுப்பும் தாயின் கைக்கு மாறியது காரணம் தந்தையை காலன் கொண்டு சென்று விட்டான்.   
எனது மூத்த சகோதரிக்கு மணமாகி ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் . எனது இளைய சகோதரிக்கு மணமாகி ஒரு ஆண் குழந்தை  உள்ளான்.  எங்கள் பெற்றோருக்கு கிடைத்த மாப்பிள்ளைகள் இருவரும் எங்களைப்போன்றவர்கள் ஆனால் எங்கள் வீட்டில் பிறக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும்.

முழுமையான இறை நம்பிக்கை இல்லாத என்னை கடவுளுக்கு நன்றி சொல்ல வைக்கிறது .  சந்தோஷம் நிறைந்த குடும்பம் எனது, என்னடா என்னைப்பற்றின்னு தலைப்புல நான் வரலயேனு பாக்குறிங்களா  எனது குடும்பம் தான் நான்.










*********






இந்த உலகம் முழுவதும் கேள்விகளால் சூழப்பட்டுள்ளது.
உலகம் எப்படி உருவானது ?
முதலில் தோன்றிய உயிரினம் எது ?
மனிதன் எப்படி தோன்றினான் ?
தோன்றிய மனிதன் பரிணாம வளர்ச்சியை எப்படி அடைந்தான் ?
அவனுக்குள் மொழி எப்படி உணரப்பட்டது ?
தன் வாழ்விடத்திற்கான எல்லைகளை எதன் அடிப்படையில் பிரிதுக்கொண்டான் ?
சாதி , மதங்களை , ஏற்படுத்தியது யார் ?
சாதி , மதங்கள் மனிதனின் வாழ்வாதாரமா ?


No comments:

Post a Comment