> மியாவ்..... என்று அடிக்கடி (கத்துவேன்) எழுதுவேன்..
மேற்கில் கண்டுவிட மாட்டோமா
செங்கதிர்க் கரங்களை நீட்டி
ஆரத்தழுவிக்கொள்ளும்
அந்த சூரியனை
இப்படித்தான் ஒரு சில எதிர்பார்ப்புகளும்...
> வாசிப்பின் கோரப்பிடிக்கு இரையாகப் போகிறது எனக்கான மணித்துளிகள் .
> எனக்காக நான் வாழப்போகும் அந்த ஒரு நொடிக்காக காத்திருக்கிறேன் பலவருடங்களாக...
கிடைத்துவிடவே போகாத அந்த ஒரு நொடிக்கான காத்திருப்புதான் வாழ்க்கையாகிறது .
> தந்தையிடம் இருந்து பணம் பறிக்க கடத்தல் நாடகம் ஆடிய மாணவன் அவனது கூட்டாளிகளுடன் கைது # சின்னவயசுல எனக்கெல்லாம் இப்புடி ஒரு யோசனை வராம போய்டுச்சே ...
> என் அறையின் விட்டத்தில்
வட்டமடித்துக் கொண்டிருக்கிறது
ஒரு கருவண்டு .
அது அடித்துக்கொண்டிருக்கும்
வட்டத்தை எண்ணமுடியாமல்
எண்ணிக்கொண்டிருக்கிறேன் .
> உழைப்பையும், முயற்ச்சியையும் சிந்தி நான் நிர்ணயித்திருக்கும் இலக்கிற்கான பாதைகளில் கிடந்த முட்களை களைந்தும் , மேடுகளை சரிசெய்தும் வைத்திருக்கிறேன் .
சிரமமற்று நடக்கவிருக்கும் அந்த பாதைகளில் அடுத்த அடி எடுத்துவைப்பதற்கு அனுபவமற்று தள்ளாடிக்கொண்டிருக்கிறேன் .
> நீங்கள் உணவுத்திருவிழா நடத்தப்படும் இடம் பசித்தவர்கள் இருக்கும் இடமாக இருக்கட்டும் .
புசித்தவர்களும், செரிமானக் கோளாறினால் அவதிப்படுபவர்களும் இருக்கும் இடமாக இருக்க வேண்டாம் மக்குகளே .
> பக்கத்து வீட்டுக்காரனிடம் பேசுவதை தவிர்த்து விட்டு
ஃபேஸ்புக்கில் பேசிக்கொண்டிருப்பதில் மௌனமாய் மனிதத்தை கொன்று கொண்டிருக்கிறேன் .
> இந்த உலகத்திலேயே அமைதிக்கான நோபல் பரிசு வாங்க தகுதியான ஒரே ஆள் நம்ம பிரதமர் மன்மோகன்சிங் ஒருவரே .
> பெட்ரூம விட Hair cutting கடையில் தான் நல்லா தூக்கம் வருது ...
> இந்த உலகத்திலேயே மிகப்பெரிய ஆன்லைன் "டீ" கடை ஃபேஸ்புக்குதான்யா . இன்னும் கொலைக்களமா மாரல ...
> கொட்டும் மழையில் மொட்டை மாடியில்
மழையின் துளிகள் சண்டையிட்டு வருவதை
கண்டு ரசிக்க ஆசை தான் .
> காலைல 3 இட்லி தான் சாப்டுவேன்னு கண்டிப்போட சொன்ன என்னோட தட்டில் 4 இட்லிக்கான சட்னிய வச்சி தாய்மையை நிரூபிக்கிறாள் .
> 3-வது படிக்கிற என்னோட அக்கா பையன் பள்ளிக்கூடம் போயிட்டு வந்து பாக்கெட்டிலிருந்து ஒரு துண்டு பேப்பரை எடுத்து அவங்க அப்பாகிட்ட என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தான் . என்னடா சொல்லிட்டு இருக்க? கையில் என்ன பேப்பர் ? அப்டின்னு கேட்டேன் ஃபோன் நம்பர் அப்டின்னான் யாரோட நம்பர்டான்னு கேட்டேன் . கௌசிகா நம்பராம் . எதுக்குடான்னா ... டவுட் கிவுட் இருந்தா கேட்டுக்குவானாம் . எக்ஸாம் எப்டி எழுதினேன்னு கேட்பானாம் . # ங்கொய்யால நம்மள எல்லாம் பொம்பள புள்ளைங்க கூட பேசவே விடாம தனித்தனியா அடைச்சி வச்சிருந்தாங்க . என்னமோ போ .
> கொலை , கொள்ளை, ஊழல் , லஞ்சம் , கருப்புப்பணம் ........... இப்புடியே போயிட்டு இருந்தா நாட்ல புரட்சிதான் வெடிக்க போகுதுன்னு சொல்லிட்டு இருந்தான் நண்பன் .....அவன் சொல்லிக்கொண்டிருந்தது ஒரு மாலைப்பொழுதில் . இடைமறித்த நான் , காலைல என்னடா டிபன் சாப்டன்னு கேட்டேன் .ஆஹா ..." மறந்துடுச்சே" ..... அப்டிங்கறான்.
> பாரதி என்ற பெயருக்கும் பின்னால் தன் இனத்தைக்குறிக்கும் பட்டத்தையும் பின்னால் சேர்த்திருக்கும் ஒரு நபரை இன்று சந்திக்க நேர்ந்தது. # சாதிகள் இல்லையடி பாப்பா...... நெஞ்சு பொறுக்குதில்லையே ................கிங்கிலி மிங்கிலி கொடுமைடா.
> அவசரமாக O+ ரெத்தம் உனக்கு வேண்டுமானால் என் வீட்டு கொசுக்களை உங்களிடத்தில் அனுப்பித்தருகிறேன் .# எவ்ளோ குடிக்கிது....
> அன்பை விதைப்பது பலம்.
அதை விதைக்காமல் இருப்பது பெரும் பலம்.
> நண்பர்களில் இரண்டு வகை உண்டு...
ஒன்னு கீழ விழாம கைதூக்கி விடறவன்.
இன்னொன்னு தனக்கும் மேல போயிடாம பாத்துக்கிரவன்.
> புறக்கணிப்புகளும் வெற்றிக்கான பாதையை மலர்த்தூவி அலங்கரிக்கின்றன.
> மதிப்பெண்களை பிரதானப்படுத்தும் இன்றைய கல்வி முறையில் உடன்படாமல் விமர்சனம் செய்துவிட்டு, நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வாழ்த்து சொல்லும் வினோதமான சமூக கட்டமைப்புக்குள் வாழ்கிறோம் .
>பசியுடன் வந்தவனுக்கு பையிலிருந்த பத்து ரூபாயை கொடுத்து ஏதாவது வாங்கி சாப்பிட்டுகோ என்றேன்....மகிழ்ச்சியுடன் சென்றான்.
நானும் மகிழ்ச்சியுடன் வந்தேன் என் கவிதைக்கான இரண்டு வரியை கொடுத்தானென்று.
> துளை விழுந்த படகின் ஓட்டி நான்...
என்னுடன் இருப்பது ஒரு துடுப்பும்,சிலபயணிகளும்.
என் தூரம் பற்றி எனக்கு கவலையில்லை.
> அவசியமற்றவனின் குரலுக்கு எந்த ராகமும் ஸ்ருதி சேருவதில்லை.
> திரைக்கதை எழுத கற்றுக்கொள்ள சிறந்த ஆசான்.
"பேசும்படம்"
> அடர்த்தியான மன இறுக்கத்தை கலையச்செய்யும் சிகிச்சையை யாரிடமிருந்து கற்றுவந்தாய் குழந்தாய் நீ....
நீ என் உறவெனும் போது சற்றே கூடுதல் மகிழ்ச்சி எனக்கு.
நிலா...நீ... மாமனைப் பார்க்க எப்போது வருவாய்...
ஏதாவது ஒரு பௌர்ணமி கழித்து வருவாய்...
காத்திருப்பேன்.
> ஒரு குறும்படம் எடுக்கப்போறேன்னு சொன்ன உடனே என்ன கான்சப்ட் ன்னு கேட்க்காம
யாரு ஹீரோவா நடிக்கிறான்னு கேட்பவனே தமிழின் மிகச்சிறந்த ரசிகன்.
> பிள்ளையாருக்கு தொந்தியும் தும்பிக்கையும் வைத்து இன்றைய தினம் வயிற்றைக் கழுவிய அந்த மண் சிற்ப்பியின் இன்றைய கனவு என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்...
> மூன்று வருடங்களுக்குப் பிறகு எனது twitter கணக்கை login செய்தேன் என்பதை facebook - ல் பதிவிடும் எனது மனநிலையை என்னவென்று சொல்வேன்.
> ஒரு கோப்பை தேநீர் கொடுத்தால் கொலை கூட செய்வேன்.
கொடுக்காவிட்டாலும் அப்படித்தான்.
> profile-ல் ஒரு முகம்...
status-ல் ஒரு முகம்...
inbox-ல் வேறு ஒரு முகம்...
> முறிஞ்சி விழ முறிஞ்சி விழ ஏதாவது ஒரு கிளைய பிடிச்சு தொங்கவேண்டிய கட்டாயம் இருந்துட்டே இருக்கு.
> உன்னுடைய பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் வருத்தப்பட்டு ஆறுதல் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை...
அது உன்னை குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிவிடலாம்.
ஆகவே அதற்க்கான தீர்வை தேடிச்சொல்வது மட்டுமே என் நிலைப்பாடாக இருக்கும்.
> நேத்து ஒரு சினிமா director கிட்ட phone ல பேசற வாய்ப்பு கிடைச்சது.... சுமார் ஒரு 27 நிமிஷம் தான் இந்த வாய்ப்பு...
அவர் எனக்கு குடுத்த dialogue என்ன தெரியுமா....?
"ம்ம் ம்ம்ம் ம்ம்ம்" இவ்ளோ தான்...
நீங்க எந்தெந்த படம் சார் direct பன்னிருக்கிங்கன்னு கேட்டேன்...
ஏதோ கேள்விபடாத பேரா 2 -3 சொன்னார்...
> "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" பார்த்துவிட்டு மீண்டு வரமுடியா மண்புழுவென நெழிகிறது மனம். கடந்த பல வருடங்களில் தமிழில் ஒரு அற்புதமான சினிமா. மிஷ்கின் தன்னுடைய career ல் இனி இப்படி ஒரு படம் எடுப்பாரா என்பது சந்தேகமே. அவரின் ஆகச்சிறந்த படைப்பு. இதுவாத்தான் இருக்கும்.
No comments:
Post a Comment