Wednesday, October 30, 2013

நம்பிக்கை


அந்தியில் மலரும்
மந்தாரை விதையொன்று
அவ்வப்போது கடந்துபோகும்
கருமேகங்களின் துளிகளில்
விருட்ச வேர்களை நீட்டிப் பார்க்கிறது.

தோல்வியின் விதயாகவே
இந்த பூமியில் விழுந்திருக்கிறேனோ
என்ற விரக்தியில்
ஏதேனும் ஒரு மழையுதிர்க்
காலத்திற்காக காத்திருக்கிறது.

கடந்துபோகும் எல்லா மழையுதிர்க் காலமும்
பொய்த்தே போகிறது.

இருந்தும் மண்ணிற்கு உரமாகிவிடாமல்
விதை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.




1 comment:

  1. உயிர்ப்புடன்... பிரமாதம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete