நீ
விதைக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும்
எனக்குள்
கருவாகிப்போகிறது .
புதிது
புதிதாய் பலப்பல சொற்க் குழந்தைகளை
மூளைப்
பைக்குள் சுமக்கச்செய்து விடுகிறாய்.
எனக்குள்
நீ பாய்த்துவிட்ட வார்த்தை விந்துக்களுக்கு
நிரந்தர
பேறுகாலமென்று ஏதுமில்லை.
நீ
விதைக்க விதைக்க நான் பிரசவிக்கிறேன்
விதைப்பதை
நிறுத்திவிடாதே...
பெ(உன்னால்)ண்ணால்
பிரசவிக்கும்
ஆண்
நான்.
ஹை.... சூப்பர்
ReplyDeleteஅப்டியா....:) நன்றி காயத்ரி தேவி...
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி தனபாலன் சார்.நானும் பார்க்கிறேன்.
ReplyDelete