ஏதோ ஒரு.
எதார்த்த நிகழ்வு
நியாயம் கடந்து
எல்லை மீறியதால்.....
எல்லை மீறியதை
எல்லை மீறி !!
என்னுள்
உழன்று கொள்ளச் செய்ததால்
என் சுயநினைவை
இழந்து போனேன் .......
சுயநினைவை இழந்தாலும் .
சுயம் மட்டும் இழக்கவில்லை !!
சுயநினைவின்
நியாயமே இங்கு
சுயமாய் ......
நியாயம் கடந்த
எல்லை மீறல்
எதுவென்று
தெரியவில்லை !!
சுயநினைவு
இழந்ததால் ..........
உறவின் வஞ்சகமோ !!
நட்பின் வஞ்சகமோ !!
உறவின் நிரந்தர பிரிவோ !!
நட்பின் நிரந்தர பிரிவோ !!
கரம் கோர்க்க
எத்தனித்த நேரத்தில்
கை நழுவிய காதலோ !!
என்னை நானே
நம்பாமல் போனதோ !!
கருவுக்குள்
காத்தவன்
காப்பகத்திற்கு
கடத்தியதாலோ !!
கருவுக்குள்
காத்தவளை
காப்பகத்திற்கு
கடத்தியதாலோ !!
உலகறியச் செய்தவனை
உதாசீனப்படுத்தியதாலோ !!
உலகறியச் செய்தவனே
உதாசீனப்படுத்தியதாலோ !!
காமக்கூட்டம்
கருவறுத்ததாலோ !!
ஆம் இவை எல்லாம் இங்கே
எதார்த்த நிகழ்வுகள் தான் .........
இன்னும் நிறையவும் இருக்கின்றது....
நியாயம் கடந்த
எல்லை மீறலுக்கு
எல்லையுமில்லையோ !!
எல்லை மீறி
உழன்று கொண்டால்
எதுவுமேயில்லை ......
இதற்க்கு மேல்
தொடர்ந்தால்
தலைப்பாய் நானே .....................
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_29.html?showComment=1383009193478#c3819328576732986169
கவிதையின் வரிகள் நன்று...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முடித்த விதம் முத்தாய்ப்பு.
ReplyDeleteவணக்கம் ரூபன். நன்றிகள். நானும் பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி சசி கலா.
ReplyDeleteசிவா, என்ன சொல்றதுன்னு தெரியல, அருமை... நிறைய எழுதுங்கள் சிவா
ReplyDeleteவணக்கம் அம்மணி, நன்றி.
Deleteவலி சுமந்த வரிகள்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி எழில்.
ReplyDelete