மண்ணிற்கு
- " அரச்சலூர் செல்வம்" என்பவர் இயற்கை வழி விவசாயத்தை ஊக்குவிப்பவர்களில் ஒருவர்.
- விதைகளை வெளியிலிருந்து வாங்கவேண்டாம் என்றும், தாங்களே உருவாக்கிகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
- சாணம், நெய், தேன், வெல்லம், தயிர், பனங்கள், கோமியம், பால், இளநீர், வாழைப்பழம், இவைகளை ஒன்றாக சேரத்து 15 நாட்கள் ஊறல் போட்டபின் கிடைப்பது தான் " பஞ்சகவ்ய உரம் "
- சாணம், கோமியம், வெல்லம், இவைகளைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் "அமுதக்கரைசல்"
- வீணாகிய பழங்களைக் கொண்டு தயாரிப்பது, " ஜீவாமிர்தம் " இவை நுண்ணுயிர்களுக்கு உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படும்..
- இரசாயன உரம், இந்தியாவில் 12 கிலோ மண்ணின் உயிர்த்தன்மையை தின்று 1 கிலோ விளைச்சல் தருகிறது.
- .
- வீட்டுக் காய்கறி தோட்டத்து தாவரங்களில் பூச்சி வந்தால் இஞ்சி , பூண்டு இவற்றை அரைத்துத் தெளிக்கலாம். உரமிட வேண்டுமெனில் மோரை கரைத்து தெளிக்கவும்.
No comments:
Post a Comment