- எனக்கு வேர்கள் கிடையாது. கால்கள்தான் உண்டு .
- அரசாளும் மன்னன் அரசனாக மட்டும் நடந்து கொள்ளவேண்டும். கணவனாகவோ , தகப்பனாகவோ , நண்பனாகவோ நடந்துகொள்ளக் கூடாது. அப்படி நடந்துகொள்ளும் மன்னன் தன்னையும், தன் நிர்வாகத்தையும் தானே சீரழித்துக் கொள்வான். - சீனத் தத்துவஞான கன்ஃ பூஷியஸ்.
- மைனராக இருந்த மானுடம் மேஜரானது புத்தகங்களின் அறிமுகத்துக்குப் பின்னர் தான் . - வலம்புரி ஜான்.
- துயரங்களின் நகைச்சுவையே மனித வாழ்க்கை. - சார்லி சாப்ளின்
- மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை.- மாசேதுங்.
- தோல்வி வந்தால் அது உனக்கு பிரியமானதைப் போல் காட்டிக்கொள். வெற்றி வந்தால் அது உனக்கு பழக்க மானதைப்போல் காட்டிக்கொள்.- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
- மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல. பலரின் மௌனம்.- மார்டின் லூதர் கிங்.
- ஒரு துளி செயல் 20 ஆயிரம் வெற்றுப் பேச்சுக்களை விட சிறந்தது. - விவேகானந்தர்.
- சமரசம் ஒரு தேவையான ஆயுதம். நம்மை ஆசுவாசப் படுத்திக்கொண்டு வலுப்படுத்திக்கொள்ள, அழிக்க நினைக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க சமரசம் தேவைப்படுகிறது. - பகத்சிங்.
- எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச்சொல்லி ஆள்வது கடினம். அதனால் பெரிய பொய்களை சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். - கோயபல்ஸ்.
வலைச் சரத்தின் வழியே வந்தேன்.
ReplyDeleteஉங்கள் தத்துவங்கள் , உங்கள் தாத்தா விட்டு விட்டு போன சொத்து
பற்றிய பதிவுகள் படித்தேன்.
நீங்களும் தஞ்சாவூரா?
நானும் தான்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
என் தளம் வாசித்ததற்கு நன்றி அய்யா... நான் தஞ்சாவூர் தான்.
Deleteஅழகான தத்துவங்கள் - இல்லையா அண்ணா.... நீங்களும் தத்துவம் சொல்லுங்க
ReplyDeleteசொல்லிடுவோம்டா...காயத்ரி.
Delete