என்னைப்பற்றி



என்னைப் பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை என்ற போதிலும் எதையோ சொல்ல வேண்டியிருக்கிறது. வாசித்தலும், எழுதுதலும்,என் கைப்பிடிக்குள் அடங்காத மௌனமாய் சிதைந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்த போது, facebook எனும் முகநூலின் வாசிப்பினால் எனது சிந்தனையை பெருக்கிக் கொண்டேன். மெல்ல கவிதைகள் எழுதினேன். அப்புறம் சிறுகதை, கட்டுரைகள். இப்போது திரைக்கதையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  

சிலரது ஊக்கம் மட்டுமே என்னை எழுதத்தூண்டி இயங்கச் செய்தாலும், பலரது புறக்கணிப்பும்,புறந்தள்ளலும் என்னை அயர்ச்சியுறச்செய்து பின், புதுவேகம் கொண்டு இயங்கச் செய்கிறது.

கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என எனது எழுத்துக்களையெல்லாம் இங்கே தட்டச்சிட்டு விடுகிறேன். எனது திரைக்கதை எழுத்துக்களை மட்டும் திரையேற்றும் கனவில் மிதந்து கொண்டிருக்கிறேன்.

மிகக் கடினமாக உழைத்து எழுதப்பட்டிருக்கும் எனது திரைக்கதையைத்தான் கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.

"எனக்குள்ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு மென்னுணர் சினிமா... உங்களுக்கும் காட்டுவதற்காக அந்த சினிமாவை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன். என் கண்கள் தானமாக கொடுக்கப்படும் வரை"

என் கதைக்கான oneline சொல்ல அலைகிறேன்.

வெற்றியோ தோல்வியோ...

முயற்சி, உழைப்பு, விதி...

இதில் எது வலியது...?

விதி வழி நடக்கிறேன்.

No comments:

Post a Comment