Sunday, May 16, 2010

எனது கிறுக்கல்



நம் முன்னோர் நமக்கு பத்திரமாக விட்டுச்சென்ற இந்த பூமியை நம் சந்ததிக்கு நாம் பத்திரமாக விட்டுச்செல்ல கடமை பட்டவராவோம்.






                                     *****************


உயிர் பிச்சை கேட்கும் பூமி

ஏ மானிடா! ஏய் மானிடா!! கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொன்று கொண்டிருக்கிறாய்.  உன்னைப்போலவே எனக்கும் மறுபிறவியின் மீது நம்பிக்கையில்லை.  எனவே உனது சந்ததியினர் வழி வழியாக என்னுடன் வாழ என்னை நீண்ட நாள் வாழ விடு.

                                     ******************

எனது அறிவுரைகளும் உபதேசங்களும் என்னைத்தவிர மற்றவர்கள் அனைவருக்கும்

                                                    இப்படிக்கு
                                                               
                                                      மனிதன்

                                       ********************

எதுவும் எளிதல்ல  முயற்ச்சிக்காத  வரையில்
எல்லாம் எளிதே முயற்ச்சித்தால் .

                                            ******************

உலக அழிவிற்க்கான ஒத்திகையை இந்த பூமி அரிதாரம் பூசிக்கொண்டு அரங்கேற்றத்தொடங்கிவிட்டன.

                                          ******************

கனவுகள்:

 தயாரிப்பாளர், இயக்குனர், உழைப்பு, இவையேதும் இல்லாமல்  உறக்கத்தையே அனுமதிச்சீட்டாகக்கொண்டு உறக்கத்தில் காணும் சிறந்த படம்..

                            ***************

விவசாய வளர்ச்சி என்ற பெயரில் என் மீது செயற்கை உரங்களை தூவி என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதோடு நீயுமல்லவா உரம் கலந்த உணவை உட்கொண்டு உடல் உபாதையுற்று மடியப்போகிறாய்.  பாவம் நீயும் என்ன செய்வாய் இந்த அவசர உலகில் போட்டி போடவேண்டிய கட்டாயம் உனதல்லவா ...

                            ************


முதியோர் இல்லம் :::  பெற்றபிள்ளைகளின் அன்பளிப்பு இல்லம் .

இக்கண் என்கண்முன் சாதிய கட்டுப்பாட்டுப்பூட்டாய் ....


பகுத்தறிவு மையூற்றிய எழுத்தாணி திறவுகோளாய்....

அடிமைச்சிறகிலிருந்து காதல் வானில் சிறகுவிறித்து பறக்கும் பறவைகள் காதலர்களாய்....

...முதலில் நன்றியுடன் முத்தமிட வருகிறது திறவுகோளுக்கு.........

No comments:

Post a Comment