Tuesday, November 5, 2013

சூழ்நிலைக்கைதி

முந்தியை இழுத்துப்போர்த்திய சிகப்புச்சேலையில்

மூதாட்டியொருவர் எதிர் வீட்டு வாசலில்

யாசகம் கேட்டு நின்றாள்.

எவ்வளவோ யாசகம் அளித்த

எதிர்வீட்டுப்பெண்ணின் கையிலிருந்து

யாசகம் பெற்றுக்கொண்டே...

தீர்க்க சுமங்கலியாக இருக்கணும்

என்றவாறு நிமிர்ந்தவளின் நெற்றியைப் பார்க்கிறாள்.

பின் மெட்டியைப் பார்க்கிறாள் .

பொட்டும் மெட்டியும் காலனிடம் சென்றிருந்தது.

1 comment:

  1. ஒருத்தரோட மரணத்த இன்னொருத்தர் காலம் முழுக்க சுமக்க வேண்டியதா இருக்கு

    ReplyDelete