தேனடையை சுற்றியிருக்கும் ஈக்கள் போல அந்த அரளி மர நிழலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை சுற்றி மஞ்சள் நிறத்தில் பூக்கள் உதிர்ந்து கிடந்தது. எப்போதும் போலவே சுப்பு தனது அலுவலகம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச்சென்றான்.
அப்போது அந்த மரப்பொந்தின் கூட்டுக்குள்ளிருந்து தாய்க்குருவி தன் குஞ்சுகளை விட்டு வெளியில் வந்து, பறந்து பறந்து கிளைகளில் அமர்வதும், பின்பு கூட்டுக்கு செல்வதுமாகவே இருந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த சுப்பு, இரைதேட விட்டுப்பிரியும் போதே நிரந்தர பிரிதலுக்கான ஒத்திகையை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டான். விட்டுப் பிரிதலை விட அதற்கான ஒத்திகை பார்ப்பதென்பது அதிக வலியாகவே அந்த தாய்க்குருவிக்கும் தெரிந்திருந்ததில் சுப்புவுக்கு ரொம்பவே ஆச்சர்யம்.
சுப்புவும் சில நாட்களாக தன் குடும்பத்தை நிரந்தரமாக விட்டுப் பிரிவதற்கான ஒத்திகையைபார்த்துக் கொண்டிருப்பதாகவே எண்ணிக்கொண்டிருந்தான். அவனுக்கான மன உளைச்சல்
அவனை அவ்வாறு தூண்டிக்கொண்டிருந்தது.
No comments:
Post a Comment