2013 செப்டம்பர் அக்டோபர் - ல் facebook
- இப்பருக்க ஒரே ஆறுதல் அடிக்கடி கழுத்தறுத்த laptop தொந்தரவு குடுக்கல ரெண்டு நாளா.... chrome அ விட்டு மாறினதிலேருந்து நல்லாருக்கு.
- போர் அடிச்சுதா... அதான் கோபத்துல deactive பண்ணிட்டேன்.
மறுபடியும் போர் அடிச்சுதா.... அதான் கோபத்துல active பண்ணிட்டேன்.
- அடர்த்தியான மன இறுக்கத்தை கலையச்செய்யும் சிகிச்சையை யாரிடமிருந்து கற்றுவந்தாய் குழந்தாய் நீ....
நீ என் உறவெனும் போது சற்றே கூடுதல் மகிழ்ச்சி எனக்கு.
நிலா...நீ... மாமனைப் பார்க்க எப்போது வருவாய்...
ஏதாவது ஒரு பௌர்ணமி கழித்து வருவாய்...
காத்திருப்பேன்.
- ஒரு குறும்படம் எடுக்கப்போறேன்னு சொன்ன உடனே என்ன கான்சப்ட்ன்னு கேட்க்காம
யாரு ஹீரோவா நடிக்கிறான்னு கேட்பவனே தமிழின் மிகச்சிறந்த ரசிகன்.
- பிள்ளையாருக்கு தொந்தியும் தும்பிக்கையும் வைத்து இன்றைய தினம் வயிற்றைக் கழுவிய அந்த மண் சிற்ப்பியின் இன்றைய கனவு என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்...
- ஒரு கோப்பை தேநீர் கொடுத்தால் கொலை கூட செய்வேன்.
கொடுக்காவிட்டாலும் அப்படித்தான்.
- ம்மா... ஒரு டீ...
- ஆயிரங்களை கொடுத்துப் பெற்ற உன் jeans pant. அரைநிர்வாண மனநோயாளியை கடந்து போகும்போது உறுத்தவில்லை என்றால்....
உனக்கும் எனது தீபாவளி வாழ்த்து.
- படகும் துடுப்பும் மட்டுமே போதவில்லை பயணம் செய்ய.
நீர் நிறைந்த ஓடையும் தேவைப்படுகிறது.
- எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை...
தொலைந்த பொருள் எதுவென்றும் நினைவிலில்லை.
- விஷம் கலந்து அவன் அருந்திய அந்த மதுக்குவளையில்
ஓரிரு துளிகள் எஞ்சியிருக்கலாம்.
தனிமை சூழ்ந்த அந்த இரவில் அவனது அலைபேசிக்கு ஓர் அழைப்பு...
அந்த அழைப்பை ஏற்றவன் நிரந்தர மயக்கநிலைக்கு சென்றிருந்த போது.
அலைபேசியின் எதிர்முனை குரல்.
"சார் உங்களோட கதையை படமா தயரிச்சுடலாம்னு சார் சொல்லிட்டார்.... நாளை காலை எங்க ஆபீஸ் வந்துருங்க...."
No comments:
Post a Comment