Tuesday, November 26, 2013

கலையாத படிமம்

மிச்சமிருக்கும் கரும் படிமங்களையும் உதறி விடிந்த
இரவுப் போர்வைக்குள் கலையாத படிமமாய்...

ஒரு ஒண்டிக் கிடந்தவனின் கனவு
ஒண்ட இடம் தேடியவனின் வெற்றி.
புசித்துக் கிடந்தவனின் கனவு
பசித்துக் கிடந்தவனின் தோல்வி.
தூக்கம் அலைய விட்டவனின் கனவு
தூங்கிப் போனவனின் வெற்றி.
கூடிக் கிடந்தவனின் கனவு
துணை தேடியவனின் தோல்வி.
துணை கிடைத்தவளின் கனவு
வலி தாங்க முடியாதவளின் வெற்றி.
விக்கிக் கிடந்தவனின் தாகம்
சிறுநீர் கழிக்க முடியாதவனின் விரக்தி.
வம்பு நிறைந்த வார்த்தைகள்
உணர்ச்சியில்லா மனிதர்கள்
ஒருவருமில்லா சாலை
முக்காடுகளால் நிரம்பிக் கிடந்த நடைபாதை
கயவர்களின் கத்தி முனை
நீண்டு நடந்திருந்த ஒற்றைப் பாதைச் சுவடு.

2 comments:

  1. கனவு - வெற்றி : சொன்னவிதம் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றிகள் சார். தொடர்ந்து என் தளம் வாசித்து என்னை ஊக்கப்படுத்துபர் நீங்கள். மிக்க நன்றி.

    ReplyDelete