நீள்வட்ட காட்டுப் பாதைக்குள்
ஆயுதங்கள் ஏதுமின்றி சுற்றித் திரிகிறாய்.
உன் இலக்கின் நீள்வெளி இன்னும் உனக்கு
தெரியாததாயிருக்கிறது.
கர்ஜிக்கும் குரல்களை நீ
மொழிபெயர்த்துக் கொள்ள மறுக்கிறாய்.
சிறுத்தைகளின் வேகம் உணராமல்
உன் நடையின் வேகம் கூட்டிக் கொள்ள மறுக்கிறாய்.
கூர் கொம்புகளுடன் உனைத் துரத்தும்
காண்ட மிருகக் கூட்டங்களை
ச்சூ எனக் கையசைத்து விரட்டிவிட முனைகிறாய்.
உன் பாதையில் கிடக்கும் இலைச் சருகுகளின் அசைவு
கருநாகம் தொடர்வதைப்போல் நீ உணரும்போது
உன் இலக்கின் அடையாளம் தென்படுவதான மாயையில்
உன் கால்கள் சற்றே வேகமெடுக்கிறது.

முடிவில் மாயை...
ReplyDeleteஅருமை...
வாழ்த்துக்கள்...