Sunday, December 29, 2013

வழியெங்கும் மனிதர்கள்

வருந்தி அழைக்கும் குரல்.
விரும்பி செல்லும் பயணம்.
வழியெங்கும் மனிதர்கள்.
அக்காவின் அகவையொத்த
தமக்கையை தரிசித்த பூரிப்பு.
எப்போதோ கண்ட தோழியை
வெளிச்சமிட்ட மெர்க்குரி விளக்கு.
மனித கூட்டத்திற்குள் தனித்தோடும் நாய்.
போஸ்டர் உரிக்கும் மாடுகள்.
இருப்பை முழம் போட்டுத்தீர்க்க அலையும்
பூக்காரியின் கண்கள்.
அழகாய் மட்டும் குறுக்கிட்ட ஒரு தேவதை.
காதலியாய் தேட இடைமறித்த மூளை அணுக்கள்.
தந்தையின் தோளில்
பனிக்குல்லா குழந்தையின் கண்ணம்.
நரைத்துப் பழுத்த கணக்கு வாத்தியாரின் தலை.
இன்னுமா இருக்கிறான்...!!
என்று ஆச்சர்யத்தில் உறையவைத்த மனிதர்கள்.
பேத்தியின் கைப்பிடிக்குள் பத்திரமாய்
கடக்கப்பட்ட அகண்ட சாலை.
வெறிச்சோடிக் கிடந்த சாயங்கால சந்தை.
விளக்குகளால் நிறைந்த ஊட்டி ஃபிரெஷ் கடைகள்.
அவ்வப்போது தரிசித்துக் கடந்த ஆலயங்கள்.
குறுக்கிட்டு மரித்த ஆஞ்சநேயருக்கு மட்டும் அர்ச்சனை.
காணிக்கைக்காக எறிந்த சூடத்தட்டில் அர்ச்சகரின் கண்கள்.
அவ்வப்போது தங்கும் இடம்.
எப்போதும் கிடைக்கும் பாசம்.
அடங்க மறுத்த சிரிப்பொலிகள்.
புதிய உணவு... புதிய சிந்தனை.
புதிய உறக்கம்... புதிய கனவு
புதிய விடியல்... நிறைய புரிதல்கள்
திரும்பச்சொல்லும் (செல்லும்) மனநிலை
விட மறுத்த கட்டளைகள்.
திரும்ப வேண்டிய கட்டாயங்கள்
வழியெங்கும் மனிதர்கள்.

..................................................

........................................

........................

1 comment:

  1. எண்ணங்களின் பார்வையை ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete