Wednesday, December 11, 2013

கனவில் பூத்த கள்ளிச் செடிகள்!!

நான் உறங்கிச் செலவழித்த

என் முந்தைய இரவுகளில் பூத்த கனவுகளில்

கள்ளிச்செடிகளும் பூத்திருக்கிறது

இப்பொழுதும் எப்போதாவது பூக்கிறது

ஒவ்வொரு முறையும் அதை

வெட்டி வீசியும் பார்த்துவிட்டேன்

விதை ஏதுமில்லை ... வேரும் மீதமில்லை

எப்படியோ பூத்து விடுகிறது .

இருள் கப்பிக்கொண்டு இமை ஆயாசம் கொள்ளும்

ஒவ்வொரு பொழுதுகளிலும்

களைவாள் தீட்டிக்கொண்டே இருக்கிறேன் .

1 comment:

  1. அருமை...

    வாழ்த்துக்கள்...

    மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete