Friday, May 28, 2010
குருதிமண்ணில் தமிழ் உயிர்கள் அறுவடை
Tuesday, May 25, 2010
விழிப்புணர்வு
கீழுள்ள குறும்படங்களை பார்க்கத்தவற வேண்டாம்
இது போன்ற சமூகவிழிப்புணர்வுள்ள செய்தியினை ஊடகங்கள் வாயிலாக குழந்தைகளுக்கும் எளிதில் புரியும் வகையில் அரசின் முயற்சியோடு தொடர்ச்சியாக வழங்கவேண்டும்.
மழைநீர் சேகரிப்பின் அவசியத்தினை நம் முன்னோர்கள் உணர்ந்திருந்த அளவிற்கு அவர்களுடன் கல்வியறிவில் சற்றே முன்னேற்றம் கண்ட தற்கால தலைமுறையினர் இதன் அவசியத்தினையும் , முக்கியத்துவத்தினையும் அறியாமலும்,அலட்சியபடுத்தியும் ,சுயநலமாகவும் , வாழ்கின்றனர் இனியாவது மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும்.
புவி வெப்பமடைதலை அணைத்துதரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையிலும் , இதனால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகளை பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் , தனது அன்றாட வாழ்வில் நிகழும் இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மறந்து போகாமலிருக்கவும் , அலட்சியபடுதாமளிருக்கவும் இதன் முக்கியத்துவத்தினை அடிக்கடி உணரும் வகையிலும் அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டும்.
Sunday, May 23, 2010
என்னை கவர்ந்தவை
2 . நாங்கள் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டிருக்கிறோம்
என்ற வாசகம் .
3 . அத்தியாவசிய நுகர்வு கலாச்சாராம் .
4 . குளிருக்குப்பின் வரும் கோடை .
கோடைக்குப்பின் வரும் மழை .
மழைக்குப்பின் வரும் கோடை .
5 . தேடல் : நல்ல விஷயங்கள் எதுவாயினும் அவற்றிற்காக ஆசைப்படவேண்டும் அதற்காக ஏங்கவும் , உழைக்கவும் வேண்டும் . விடா முயர்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் கிடைக்கும்வரை தேடிக்கொண்டே இருக்கவேண்டும்
6 . வானலாவிய விண்ணின் ஊதா நிறம் .
7 . பாக்கு மரத்தின் நீண்ட மெல்லிய உயரம் .
8 . சிட்டுக்குருவியின் சுறுசுறுப்பு .
9 . மரிக்கொழுந்து , பெட்ரோல் , பெயிண்ட் , நைல்பாளிஷ் , காஸ் , மண் , மற்றும் வெடியின் வாசம்.
10 . குதிரையின் வேகம் .
நான் விரும்புபவர்கள்:
1 . பாரதியார்.
2 . இந்திராகாந்தி அம்மையார்.
3 . வைரமுத்து.
4 . சேகுவேரா.
5 . இசைப்புயல் a . r . ரஹ்மான்.
6. லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
7. கமல்ஹாசன்
8 . மணிரத்னம்
Saturday, May 22, 2010
புவி வெப்பமாதல்::
தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.
இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,
நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.
அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.
இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.
இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.
தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.
கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.
அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.
இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.
இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.
உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்
**
புயலாக வெளிப்பட்ட அந்த மின்காந்த சக்தி பூமியை தாக்கியது. சூரியன் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தியதால் தான் பூமியில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதேபோன்று, சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "மின்காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
"சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது. இதனால் செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள் வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்னை ஏற்படும். "பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரிசெய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும்' என்று நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் கூறுகிறார்.
"விண்வெளி வானிலை' என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது. இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ் ஷரின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டாக்டர் பிஷ்ஷர் (69) சூரிய மின்காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது. அப்போது, சூரியனின் வெப்பம் மிக அதிகபட்சமாக, 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல், மூன்று, நான்கு முறை சூரியனில் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013ம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. இவ்வாறு ரிச்சர்ட் பிஷ்ஷர் எச்சரித்துள்ளார்.
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2010,23:31 IST
மனிதனின் பல்வேறு தவறுகளால் உலக வெப்பம் அதிகரித்து வருகிறது என, விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். துருவப்பகுதிகளில் பனி மலைகள் உருகி, பனியாறாக ஓடி, கடலில் கலப்பதால், கடல்நீர் மட்டம் உயர்வதும், உலக வெப்பம் அதிகரிப்பின் ஒரு விளைவு தான் என, வானிலை மாற்றம் குறித்த புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அதிகமாக மரங்களை அழிப்பதாலும், வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட வாயுக்களாலும் உலகின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு உலக வெப்பம் அதிகரிப்பதால், துருவப்பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி, பனியாறாக மாறி, இதுவரையில் திட நிலையில் இருந்த நீர், திரவமாகி கடலில் கலந்து வருகிறது. இதனால், கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளது என, வானிலை குறித்த புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. உலகில் உள்ள வானிலை மையங்கள் எல்லாம் நிலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் குறித்து பதிவு செய்வது வழக்கம். இந்த விவரங்களை கொண்டு விஞ்ஞானிகள் உலக வெப்பம் குறித்து ஆய்வு செய்து வந்தனர். ஆனால், பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் வித்தியாசமாக கடலின் அடியில் உள்ள வெப்பநிலை குறித்தும் அதில் ஏற்படும் மாற்றம் குறித்தும் முதல் முறையாக ஆய்வு செய்துள்ளது.
கப்பல்கள் மூலம் கடலின் நீர் மட்டத்தை அளவிடல், காற்று மண்டலத்தில், அதிகபட்ச உயரத்தில் வெப்ப நிலையை பலூன்களை பறக்க விட்டு அறிதல், உருகும் பனியாறுகளின் வெப்பநிலையை கள ஆய்வு மூலம் கணக்கிடல் உள்ளிட்ட, 10 வழிகளில் பருவநிலை மாற்றம் குறித்து அறியப்படுகிறது. பூமி உருண்டையின் மீது விழும் வெப்பத்தில், 90 சதவீதம் கடலின் மீது தான் விழுகிறது. எனவே, கடலில் நிலவும் வெப்பம் என்பது, சீதோஷ்ண நிலையை கணக்கிட முக்கிய தேவையாகும். கடல் வெப்பத்தை பிரிட்டனின் சமீபத்திய புதிய தொழில்நுட்ப முறை மூலம் துல்லியமாக அளவிட முடியும். "ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் வடகிழக்குப்பகுதியில் இந்த ஆண்டு துவக்கத்தில் கடும் குளிர் இருந்த போதிலும், தற்போது கோடை காலத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகியுள்ளது' என, தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாக அலுவலகத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 1998ம் ஆண்டிற்கு பின், தற்போது இரண்டாவது முறையாக அதிகமான வெப்பம் இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது என்று தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாக அலுவலகமும், நாசாவும் கூறுகின்றன. சர்வதேச அளவில், கடந்த 30 ஆண்டுகளாக உலக வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என, பிரிட்டனின் ஆய்வு மைய அறிக்கை தெரிவிக்கிறது. வானிலை கண்காணிப்பு மைய தலைவர் பீட்டர் ஸ்காட் கூறியதாவது: தற்போது வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் மற்ற பகுதிகளில் அதிக வெப்பம் இல்லாத நிலையில் பிரிட்டனில் மிகுந்த குளிர்ச்சியான காலமாக உள்ளது. பசுமைக்குடில் வாயுக்களால் கடந்த 50 ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. வெவ்வேறு இடங்களில் உள்ள மூன்று வானிலை மையங்களின் வெப்ப நிலையை கொண்டு சரியான வெப்பநிலையை உறுதிபடுத்த வேண்டும். 1980ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் வெப்பம் அதிகரித்தே வந்துள்ளது. குறுகிய காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் குறித்த அறிக்கைகளை தொடர்ந்து ஆய்வு செய்ததில் உலக வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதை உறுதியாக கூற முடியும். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் வானிலை மாற்றங்களை தெளிவாகவும், தவறின்றியும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பீட்டர் ஸ்காட் கூறினார்.
***********
வெப்பம் தாக்கும் அபாயம்! (தமிழ் CNN செய்தி )
சூரியனில் திடீர் வெடிப்பு; பூமியை வெப்பம் தாக்கும் அபாயம்!
புதன், 04 ஆகஸ்ட் 2010 07:27 . .
சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் இடை விடாது எரிந்து கொண்டிருக்கிறது.
அதில் ஏற்படும் வெப்பமும், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதேபோல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் பூமியை எட்டி வெளிச்சத்தையும் தருகிறது.
பூமியில் இருந்து சூரியன் நீண்டதூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. எனவேதான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன.
பூமிக்கு வரும் சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்நிலையில் ஆக.1ஆம் தேதி காலை சூரியனின் மேல்பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் முதல் வெடிப்பு பூமி உருண்டையின் அளவை விட பெரிய அளவில் இருந்துள்ளது. அடுத்து சில நிமிடம் கழித்து 2-வது வெடிப்பு ஏற்பட்டது. அது முதல் வெடிப்பை விடகொஞ்சம் சிறியதாக இருந்தது.
இதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
இதை கணக்கிட்டு பார்த்தால் இன்று இந்த வெப்பம் பூமியை தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். இதனால் பூமியை பெரிய அளவில் வெப்பம் தாக்கி ஆபத்து ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
இதன் வெப்ப அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சூரியன் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் தடுக்கின்றன. இதில் வடிகட்டப்பட்டுதான் வெப்பம் பூமிக்கு வருவது உண்டு.
இப்போது வரும் பெரிய வெப்பத்தை வாயு மண்டலங்களால் தடுக்க முடியுமா? அல்லது நேரடியாக தாக்கி விடுமா? என்று தெரிய வில்லை. வாயு மண்டலங்கள் வெப்பத்தை தடுக்க முடியா விட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இல்லை என்றாலும் கூட வேறுவகை பாதிப்புகள் சில ஏற்பட வாய்ப்பு உள்ளன.
வெடிப்பால் ஏற்பட்ட சூரிய வெப்பத்தை சூரிய சுனாமி என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர். இந்தசுனாமி பூமியை தாக்குமா? இல்லையா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்து விடும். பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன. சூரியனில் இருந்து வரும் அதிகவெப்பம் செயற்கை கோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் செயலிழந்து விடும் அபாயமும் உள்ளது. செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தால் அது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துவிடும்.
************
( தினமலர் செய்தி )
மாஸ்கோ : "வரும் 2050ம் ஆண்டில் ஆர்க்டிக் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் இருக்காது' என, ரஷ்ய வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.ரஷ்ய வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ப்ரொலொவ், இது குறித்து கூறியதாவது:வட துருவமான ஆர்க்டிக் பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டி இருந்தது. தற்போது ஒரு கோடியே 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டியின் அளவு குறைந்துள்ளது. வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் அளவு கூடியதால், வெப்பம் அதிகரித்து பனிப் பாறைகள் உருகி விட்டன. இதே நிலை நீடித்தால், இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளில் கோடை காலத்தில் இப்பகுதியில் பனிப்பாறைகளே இல்லாத நிலை ஏற்படும். ஆர்க்டிக் துருவப் பகுதியை கண்காணிப்பதற்காகவே 10 ஆயிரம் கோடி ரூபாயில் விண்வெளித் திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளோம். இதன் ஒரு கட்டமாக ஆர்க்டிக் பகுதியில் சேரும் ஹைட்ரோ கார்பன் அளவை கணக்கிடுவது உள்பட பல்வேறு விஷயங்களை ஆராய செயற்கைக் கோள்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யா, அமெரிக்கா, கனடா, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளுடன் விவாதித்து வருகிறோம்.இவ்வாறு அலெக்சாண்டர் ப்ரொலொவ் கூறினார்
2 டிகிரி வெப்பத்தை குறைக்க முடியுமா? போராடுகின்றன உலக நாடுகள்
நவம்பர் 06,2009,00:00 IST
உலகம் வெப்பமடைவதும், பருவமழை பொய்த்து வருவதும் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவாகிவருகிறது. பூமியின் சராசரி வெப்பநிலை பூமியை ஒட்டியுள்ள மேற்பரப்பிலும், காற்றிலும் நீர்நிலைகளிலும் அதிகரிப்பதே புவி வெப்பமடைதல் என்கிறோம். பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். 0.74 டிகிரி செல்சியஸ் வெப்பம் கடந்த நூற்றாண்டில் உயர்ந்துள்ளது. ஐ.நா.,வின் பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச கூட்டமைப்பு (யு.என்.எப்.சி.சி.சி.,) அறிக்கையின் படி, பூமியிலிருந்து வெளியேறும் மாசுக்களால்தான் புவி வெப்பமடைவது நிரூபிக்கப்பட்டது.
18 ஆண்டுகளாக அமெரிக் காவின் நாசா நிறுவனம் புவி வெப்பத்தை அளவிட்டு வருகிறது. இந்த ஆய்விலும் வெப்பமடைவது கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் கார்பன் டை ஆக்சசைடு அதிகரித்திருப்பதே இந்த பிரச்னைக்கு அடிப்படையான காரணம். பெட்ரோலிய பொருட்களை அதிகம் எரிப்பது, தொழிற் சாலை மாசு ஆகியனவே இதற்கு முக்கிய காரணங்கள். வளர்ந்த நாடுகளிலிலிருந்து மாசு அதிகமாக வெளியாகி வருவது நிலைமை தொடர்ந்து மோசமடைவதற்கு காரணமாக உள்ளது. இந்த கருத்தை அமெரிக்காவும் அங்குள்ள பெரிய நிறுவனங்களும் ஏற்க மறுக்கின்றன. கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்திய கியோட்டோ சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. கார்பன் வெளியேற்றத்தைத் தவிர்த்தால், தொழிற் சாலை உற்பத்தி குறையும் என்பதுதான் அந்நாட்டின் கருத்து. இது பொருளா தாரத்தைப் பாதிக்கும் என்பதால், இச்சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாங்களே தனிப் பாதை வகுத்துக் கொள்கிறோம் என்று அமெரிக்கா கூறிவிட்டது.
பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி டேவிட் கிங் இது குறித்து கூறிய போது, "சர்வதேச பயங்கரவாதத்தை விட, புவி வெப்படைதல் பயங்கரமானது என்பதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்கிறார். பூமியில் ஏற்படும் 90 சதவீத இயற்கை சீரழிவுகளுக்கு புவி வெப்பமடைதல் தான் காரணம். அதிகப்படியாக கொட்டி தீர்க்கும் மழை ஒரு புறம். இன்னொருபுறம் கடுமையான வறட்சி. வெள்ளம் மற்றும் வறட்சி இரண்டுமே விவசாயத்தைப் பாதித்து, மகசூலை குறைத்து விடுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு காற்று மண்டலத்தில் சேரும் மாசுகளின் அளவு அதிகமாகிக் கொண்டே வருவதால், விளைவுகள் இப்போதே விபரீதமாகிவிட்டன.
இதற்கிடையில், தற்போது காற்று மண்டலத்தில் சேர்ந்துள்ள மாசு அளவை 2000ம் ஆண்டில் இருந்த மாசு அளவுக்கு குறைப்பதற்கான பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் நடந்து வருகிறது. 2012ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டி விட வேண்டும் என்று கியாட்டோ ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டிய மாசின் அளவுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் வெளிநடப்பு செய்துவிட்டன. மாசு அளவை குறைக்க வேண்டுமானால் இரு விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
1. எரிசக்தியை சேமிக்கக்கூடிய தொழில் நுட்பத்துக்கு மாற வேண்டும்.
2. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கிற பழைய மாசு விளைவிக்கும் தொழில்நுட்பத்தை ஒதுக்கிவிட்டு, புதிய தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும். இதற்கு அதிகப்படியான முதலீடு தேவைப்படும்.
வளர்ந்த தொழில்மயமான நாடுகள் இதுவரை 20,900 கோடி டன் கார்பன் டை ஆக்சைடை காற்றுமண்டலத்தில் சேர்த்துள்ளன. இந்நாடுகள் 1990ம் ஆண்டில் வெளியிட்ட அளவுக்கு தங்களுடைய கார்பன் வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா., கூறி வருகிறது. 1990க்குப் பின் அதிகரித்த கார்பன் வெளியேற்றத்தில் 80 சதவீத அளவு 2050ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்று வானிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். காற்று மண்டலத்தில் நீராவி, உப்பு, மண், கனி மங்கள், கார்பன் உள்ளிட்ட மாசுத் துகள்கள், வைரஸ், பாக்டீரியா, உள்ளிட்ட துகள்கள் மிதக்கின்றன. காற்றுமண்டலத்தில் மிதக்கும் பத்து லட்சம் துகள்களில் 450 துகள்கள் மாசுத்து கள்களாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முன்னர் கூறினார்கள். அப்படியானால், 2050ல் புவியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கு மேல் உயராது. இல்லாவிட்டால் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துவிடும். இப்போது நாம் சந்திக்கும் பிரச்னை களைவிட ஏராளமான பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும் என்றார்கள்.
காற்று மண்டலத்தில் மாசு துகள்களின் எண்ணிக்கை 350க்குள் இருக்க வேண்டும் என்று தற்போது விஞ்ஞானிகள் அந்த எண்ணிக்கையை மாற்றியிருக்கிறார்கள். அப்போதுதான், புவியின் வெப்பநிலை 2டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் உயராது. துருவப்பகுதியில் உள்ள பனித்தட்டுகள் உருகி உடையாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள். அப்படியானால், 1990க்குப் பின் அதிகரித்த கார்பன் வெளியேற்றத்தில் 97 சதவீததத்தை குறைத்தால்தான் இந்த இலக்கை எட்ட முடியும். இதை வலியுறுத்திதான் மாலத்தீவில் கடலுக்கு அடியில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. சமீபத்தில் வெளியான ஒரு பொருளாதார அறிக்கையில், தற்போதுள்ள பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் எப்படி, புவி வெப்பத்தை குறைப்பது என்ற யோசனை கூறப்பபட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் தங்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்று முதல் மூன்று சதவீதத்தை சுற்றுச்சூழலை பாதிக்காத எரிசக்தி தொழில்நுட்பத்துக்குப் பயன்படுத்தினால் விரைவில் இலக்கை எட்டிவிடலாம். இது ராணுவத்துக்கு செலவிடுவதை விட மிகக்குறைவுதான். டிசம்பரில் டென்மார்க் நாட்டின் தலை நகரான கோபன்ஹேகனில் சுற்றுச்சூழல் உச்சிமாநாட்டை ஐ.நா., நடத்த இருக்கிறது. இதையொட்டி சுற்றுச்சூழலை காப்பாற்றி புவியின் வெப்பநிலை மேலும் 4 டிகிரி உயர்வதை தடுக்க வேண்டும் என்ற கோஷம் உலகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் தலைவர்கள் கையில்தான் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை இருக்கிறது. செய்வார்களா?
அனல் கக்கும் வெப்பம்: இப்போது வெளியாகும் கார்பன் மாசுகள் தொடர்ந் தால், 2050ம் ஆண்டில் உலகத்தின் தற்போதைய சராசரி வெப்பநிலை யிலிருந்து 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். ஒருவேளை இது தவறினால்கூட 2070ம் ஆண்டில் நிச்சயம் வெப்பம் உயர்ந்துவிடும். சராசரி வெப்ப நிலையில் 4 டிகிரி உயர்ந்தால், வட துருவப்பகுதியில் 15 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அப்பகுதியில் தற்போது கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத வெப்பம் நிலவும். பனித்தட்டுகள் அங்கு இருக்காது. இது கடல் மட்டத்தை 1.4 மீட்டர் உயரம் அதிகரிக்க செய்யும். "புவி வெப்ப மயமாதலால் வேறு எந்த நாடுகளையும் விட, அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியாவும் சீனாவும்தான். இவ்விரு நாடுகளும் பருவமழையை நம்பித்தான் விவசாயம் செய்கின்றன. ஆகவே, மகசூல் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப் புள்ளது' என்று போட்ஸ்டாம் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
4 டிகிரி உயரும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள இரு முக்கிய பருவ மழையில் ஒன்று மிக கடுமை யாகவும், இன்னொன்று இல்லாமலே போய்விடும் வாய்ப்புகள் கூட உள்ளன. தூவலு, கிரிபாட்டி, பப்புவா நியூ கினியா உள்ள தீவுகளில் உள்ள மக்கள் கடல்மட்ட உயர்வால் இப்போதே வேறு நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டனர். மாரிடோனியா, சூடான், கானா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் வெள்ளம் காரணமாக இனி மக்கள் வெளியேறத் தொடங்குவார்கள். 2100ம் ஆண்டில் அமேசான் காடுகளில் பெரும்பாலானவை, காட்டுத்தீ, வனஅழிப்பு ஆகியவற்றால் காணாமல் போய்விடும். புவி வெப்ப மயமாதலால் 30 சதவீத அமேசான் காடு மறைந்துவிடும்.
முக்கியமான 350: காற்றுமண்டலத்தில் மிதக்கும் கார்பன் உள்ளிட்ட மாசு துகள்கள் எண்ணிக்கை 10 லட்சத்தில் 350 மட்டுமே இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 50 லிட்டர் தண்ணீரில் ஒரு சொட்டு மாசுக்கு இது சமம். 2000ம் ஆண்டில் மாசுகள் காற்றுமண்டலத்தில் 350 எண்ணிக்கைதான் இருந்தது. தற்போது இது அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து 450 ஆக இருக்கும். இந்த எண்ணிக்கை உயர்ந்து விடாமல் தடுத்து "350' எண்ணிக்கையாக காப்பதை நோக்கமாக கொண்டுதான் ஐ.நா., சுற்றுச்சூழல் உச்சிமாநாடு டென்மார்க் தலைநகர் கோபன்கேஹனில் நடக்கிறது. நிலக்கரியை எரித்து அனல் மின்சாரம் மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைக்கு நாடுகள் விடைகொடுக்க வேண்டும். நாட்டில் எங்கு பார்த்தாலும் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இது போன்ற முடிவுகளால்தான் இந்த உலகை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பருவமழைக்கு ஆபத்து: பூமியின் சராசரி வெப்பநிலை 13.8 முதல் 14.6 டிகிரி செல்சியஸ் பூமிக்கோளத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிலவும் வெப்பநிலையின் ஒட்டுமொத்த சராசரி இது. சகாரா பாலைவனத்திலும் 58 டிகிரி வரை வெப்பம் இருக்கும். துருவப்பகுதியில் மைனஸ் 25 டிகிரி இருக்கும். இந்தியா உள்ளிட்ட பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள நாடுகளின் சராசரி வெப்பநிலை 25 டிகிரி. கார்பன் உள்ளிட்ட மாசு வெளியேற்றத்தால், பூமியின் ஒட்டுமொத்த வெப்பநிலையில் 4 டிகிரி வெப்பம் அதிகரித்தால், பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் சராசரி வெப்பநிலையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். துருவப்பகுதியில் இந்த மாற்றம் மிகக்கடுமையாக இருக்கும் என்பதால், பனி உருகும், கடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும், இதனால் பருவமழைக்கான மேகங்கள், ஒருவேளை அதிகப்படியாக உருவாகலாம். அல்லது உருவாகாமலே போய்விடலாம். அதனால் மழை தவறும்.
தயங்கும் அமெரிக்கா: சுற்றுச்சூழலை பாதுகாக்க கியாட்டோ உடன்படிக்கை 1997ம் ஆண்டு பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சிமாநாட்டில் உருவாக்கப்பட்டது. இதன்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் 2005ம் ஆண்டிலிருந்து செயலாக்கம் பெற்றது. இதில் இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் 185 நாடுகள் கையெழுத்திட்டன. எனினும் அமெரிக்கா இதை ஏற்க மறுத்துவருகிறது. 1990ம் ஆண்டு வரையிலான கார்பன் வெளியேற்றத்தில் அமெரிக்கா மட்டுமே 39 சதவீதத்துக்கும் மேல் காரணமாக இருந்தது. ஆனால் புவி வெப்பமடைவதிலிருந்து உலகை காப்பாற்றும் பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. 2012ம் ஆண்டு கியோட்டா ஒப்பந்தகாலம் முடிகிறது. அதற்குள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமும் கையெழுத்து வாங்கவேண்டும் இல்லாவிட்டால், ஒப்பந்த காலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.
கோபன்ஹேகனில் சுற்றுச்சூழல் உச்சிமாநாடு: 1992ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் முதன்முறையாக ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் உச்சிமாநாடு நடந்தது. அப்போது உருவாக்கப்பட்டதுதான், ஐ.நா.,வின் பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச கூட்டமைப்பு (யு.என்.எப்.சி.சி.சி.,). இந்த அமைப்புதான் சர்வதேச நாடுகளை சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.,வின் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தலைவராக இந்தியரான ராஜேந்திர பச்சோரி இருக்கிறார். இந்நிறுவனத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இதுவரை 14 சர்வதேச சுற்றுச்சூழல் உச்சி மாநாடுகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பரில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் மாநாடு நடக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாடுகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கியோட்டோ ஒப்பந்தத்தில் மாசு வெளியேற்றத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் இதுவரை கையெழுத்திடாத அமெரிக்கா, ஆஸி., உள்ளிட்ட நாடுகளை கையெழுத்திட வைக்க வேண்டும் என்பதும் தற்போதைய மாநாட்டின் முக்கிய நோக்கம். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவை உலகம் எதிர்நோக்கி இருக்கிறது.
பசுமை தரும் சுகம்: ஒவ்வொரு ஆண்டும் 700 கோடி டன் கார்பன் வெளி யேற்றப்படுகிறது. வாகனங்கள், தொழிற் சாலைகள் உள்ளிட்ட வற்றிலிருந்து இந்த மாசுகள் வெளியேறுகின்றன. காடுகள் அழிப்பால் 200 கோடி டன் கார்பன் சுத்திகரிப்பு தடைபடுவதால் மொத்த கார்பன் வெளியேற்றம் 900 கோடி டன் ஆக உள்ளது. கடல் மற்றும் காற்று மண்டலத்தில் 500 கோடி டன் கார்பன் சுத்திகரிக்கப்பட்டு விடுகிறது. இதனால் ஏறத்தாழ 400 கோடி டன் கார்பன் காற்று மண்டலத்தில் தங்கிவிடுகிறது. இவ்வாறாக ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி டன் கார்பன் காற்றில் மிதந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசு வெளியேற்றத்தில் 3 சதவீத உயர்வு இருக்கிறது. தற்போதைய நிலை தொடர்ந் தால் 2100ம் ஆண்டில் 1,60,000 கோடி டன் கார்பன் துகள்கள் காற்றில் மிதக்கும். இது சூரிய ஒளியின் வெப்பத்தை உள்வாங்கி, நம்முடைய காற்று மண்டலத்தை வெப்பப்படுத்தி, புவியின் வெப் பத்தை அதிகமாக்கும். மனிதர்கள், கால்நடைகள் நோய் வாய்ப்படும். மகசூல் பெரு மளவில் பாதிக்கப்படும். பூமியின் பசுமை தரும் சுகம் கனவாகிவிடும்.
இதை தவிர்க்க நாம் செய்யவேண்டியவை:
* பக்கத்து தெருவிற்கு செல்ல வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து அல்லது சைக்கிளில் செல்ல வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து சூரிய ஒளி சக்தி, பாட்டரிகளை பயன்படுத்த வேண்டும்.
* மழைநீரை சேமிக்க வேண்டும். தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
* நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது.
* வாகனங்களை முறையாக பராமரித்து மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
*மரங்களை அழிப்பதை தவிர்த்து, வீட்டுக்கு ஒரு மரமாவது வளர்க்கவேண்டும்.
*குண்டு பல்புகளின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
* இயற்கையை நேசிக்க, காக்க இளைய தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும்.
இத்தனையும் செய்தால் இந்த பூமியை, அடுத்த தலைமுறைக்கு கல்லறையாக அல்ல, கருவறையாக விட்டுச் செல்லாம்
***********
(தினமலர் செய்தி)
வாஷிங்டன் : "பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள "தெர்மோஸ்பியர்' அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.வளிமண்டலம் முடிந்து விண்வெளி ஆரம்பிக்கும் பகுதியில் தெர்மோஸ்பியர் அடுக்கு அமைந்துள்ளது.சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் தெர்மோஸ்பியர் அடுக்கு பெரும்பங்கு வகிக்கிறது.சமீப காலமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு மற்றும் புறஊதாக்கதிர்களின் பாதிப்பால் தெர்மோஸ்பியர் அடுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இதனால் பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடல்சார் ஆய்வுக்கழக விஞ்ஞானி ஜான் எம்மர்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை:பூமியின் வளிமண்டலத்தில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீரென கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எங்களது ஆய்வில் வளி மண்டல அழுத்தம் திடீரென முப்பது சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.தெர்மோஸ்பியர் அடுக்கு சூரியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும்.பூமியின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தெர்மோஸ்பியர் அடுக்கில் பரவி விரிவடைகிறது.இதை தெர்மோஸ்பியர் அடுக்கு, பூமிக்கு வராமல் தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் வெப்பத்தின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த 2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை தெர்மோஸ்பியர் அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வளிமண்டலத்தை தாண்டி தெர்மோஸ்பியர் அடுக்கு வரை பரவி விட்டது.
எனவே தெர்மோஸ்பியர் அடுக்கில் கார்பன் டை ஆக்சைடு குளிரூட்டியாக செயல்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த பாதிப்பிற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு மட்டும் காரணம் என கூற இயலாது.பிற காரணிகளும் தெர்மோஸ்பியர் அடுக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ஜான் எம்மர்ட் கூறினார்.
புவி வெப்பமடைதலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுப்பதற்கான நிலைக்கு நாம் தள்ளப்பட போகிறோம் என்பதை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை காலம் நமக்கு கண்டிப்பாக உணர்த்தும்.
அரசு தரப்பிலிருந்து செய்யவேண்டியவைகள் :
அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஓளி விளக்குகள், அதிகளவில் வெப்பத்தை வெளிப்படுத்தாத compact flouroscent bulb ( CFL ) பயன்படுத்த வேண்டும். இதே முறை நாடு முழுவதிலும் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவிழா கேளிக்கைகள் நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வெடிக்க கட்டுபாடுகள் விதிக்க வேண்டும்
பட்டாசுகளால் ஏற்படும் தீமைகளை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு உணர்த்தவேண்டும் .
இரவுநேர விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தல் .
திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்களும் , இயக்குனர்களும் புவி வெப்பமடைதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வுள்ள படங்களை தயாரிக்கவும், விழிப்புணர்வுள்ள காட்சிகளை புகுத்தவும் , குண்டு வெடித்தால் , பற்றிஎரிதல் , போன்ற காட்சிகளை தயாரிக்க தவிர்க்கவும் செய்யவேண்டும் . ஊடகங்கள் குறிப்பாக திரைப்படம் வெகுஜன மக்களை எளிதில் சென்றடையும் .
Sunday, May 16, 2010
எனது கிறுக்கல்
*****************
உயிர் பிச்சை கேட்கும் பூமி
ஏ மானிடா! ஏய் மானிடா!! கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொன்று கொண்டிருக்கிறாய். உன்னைப்போலவே எனக்கும் மறுபிறவியின் மீது நம்பிக்கையில்லை. எனவே உனது சந்ததியினர் வழி வழியாக என்னுடன் வாழ என்னை நீண்ட நாள் வாழ விடு.
******************
எனது அறிவுரைகளும் உபதேசங்களும் என்னைத்தவிர மற்றவர்கள் அனைவருக்கும்
இப்படிக்கு
மனிதன்
********************
எதுவும் எளிதல்ல முயற்ச்சிக்காத வரையில்
எல்லாம் எளிதே முயற்ச்சித்தால் .
******************
உலக அழிவிற்க்கான ஒத்திகையை இந்த பூமி அரிதாரம் பூசிக்கொண்டு அரங்கேற்றத்தொடங்கிவிட்டன.
******************
கனவுகள்:
தயாரிப்பாளர், இயக்குனர், உழைப்பு, இவையேதும் இல்லாமல் உறக்கத்தையே அனுமதிச்சீட்டாகக்கொண்டு உறக்கத்தில் காணும் சிறந்த படம்..
***************
விவசாய வளர்ச்சி என்ற பெயரில் என் மீது செயற்கை உரங்களை தூவி என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதோடு நீயுமல்லவா உரம் கலந்த உணவை உட்கொண்டு உடல் உபாதையுற்று மடியப்போகிறாய். பாவம் நீயும் என்ன செய்வாய் இந்த அவசர உலகில் போட்டி போடவேண்டிய கட்டாயம் உனதல்லவா ...
************
முதியோர் இல்லம் ::: பெற்றபிள்ளைகளின் அன்பளிப்பு இல்லம் .
பகுத்தறிவு மையூற்றிய எழுத்தாணி திறவுகோளாய்....
அடிமைச்சிறகிலிருந்து காதல் வானில் சிறகுவிறித்து பறக்கும் பறவைகள் காதலர்களாய்....
...முதலில் நன்றியுடன் முத்தமிட வருகிறது திறவுகோளுக்கு.........
பசி
அழிவு
Saturday, May 15, 2010
தியாகம்
என்னைப்பற்றி
பெண் குழந்தைகள் பெயர்கள்
A .
அருந்ததி
அட்சயா
அமிழ்தினி
அபி
அனன்யா
அபயா
அமிர்தவள்ளி
அருணா
அமலா
அனு
அனுவர்தன்
அமிர்தா
அக்க்ஷரா
ஆதிரை
அனுஷா
அனுயா
அனுஜா
அப்சரஸ்
அர்த்திகா
அர்ச்சனா
ஆதர்ஷா
ஆனந்தி
அஞ்சு
அஞ்சனா
அபிதா
அஹானா
அமோகா
அஞ்சலி
அங்கிதா
அசின்
அஸ்விதா
அமராவதி
அரவஞ்சி
அருள் மொழி
B .
பவித்ரா
பாமா
பைரவி
பாரதி
பாக்யஸ்ரீ
பாலா
பிருந்தா
பானு
பானுமதி
பாவனா
பூமிகா
புவனேஷ்வரி
பவதாரிணி
C .
சந்திரவதனா
செம்மொழி
காவேரி
சித்ரா
சித்ரகலா
சந்திரா
சின்மயி
சர்மி
சாரு
D .
தமயந்தி
தன்மதி
தன்வந்த்ரி
தர்மஷம்வர்தனி
தனலட்சுமி
திவ்யதர்ஷினி
தேவதர்ஷினி
திவ்யா
தரணி
தரண்யா
தீபிகா
தேவிகா
தேவிஸ்ரீ
தன்யா
தியா
துர்கா
தாமினி
துவாரகா
E .
ஈஷா
ஈஸ்வரி
F .
G .
கங்கா
கீதா
கோபிகாஸ்ரீ
காயத்ரி
கௌதமி
H .
ஹரி மித்ர கண்ணம்மா
ஹரிஹரப்ரியா
ஹரிணி
ஹனீபா
ஹீரா
ஹேமா
ஹேமமாலினி
I .
இந்திரா
இயல்தமிழ்
இசைத்தமிழ்
இனியவள்
இளந்தளிர்
இளந்தாமரை
இளந்தென்றல்
இந்து
இந்துமதி
இளம்பிறை
இளமதி
இளவரசி
இலக்கியா
இதயா
J .
ஜனனி
ஜானகி
ஜானவி
ஜமுனா
ஜெனப்ரியா
ஜெயா
ஜெயஸ்ரீ
ஜெயசித்ரா
ஜெயப்பிரதா
ஜெயசுதா
ஜெனிபர்
ஜோதி
ஜோதிகா
K .
கலைவாணி
கைகேயி
கனிமொழி
கார்குழலி
குழலழகி
கவி
கவிமதி
கயல்
கயல்விழி
கவிதா
கவிதாயினி
குண்டலகேசி
கோதை
கோகிலா
கோப்பெருந்தேவி
கோகிலவாணி
கோதாவரி
குறிஞ்சி
கீர்த்தி
கிருத்திகா
கலாவதி
கொள்கைச்செல்வி
கொற்றவை
குயிலி
குந்தவை
குந்தவி
காவ்யா
கண்மணி
கண்ணம்மா
கல்கி
காஞ்சனா
கௌசல்யா
காமினி
குமுதா
கனிஷ்கா
L .
லக்ஷ்மிப்ரியா
லக்ஷ்மி
லதா
லேகா
லாவண்யா
லலிதா
M .
மணிமேகலை
மிருனாலினி
மங்களம்
மைவிழி
மஞ்சுளா
மஞ்சரி
மகதி
முல்லை
மித்ரா
மோகினி
மோகனா
மாலினி
மாதங்கி
மினி
மிண்மினி
மனோன்மணி
மதிபாலா
மாதினி
மயிலா
மதுரா
மதிவதனி
மதிவதனா
N .
நிலானி
நற்றமிழ்
நிவேதா
நித்யா
நித்யஸ்ரீ
நிவேதிதா
நந்தா
நந்திதா
நந்தனா
நதியா
நளினி
நவ்யா
நேஹா
நிலா
நிரோஷா
நறுமுகை தேவி
நித்திலா
நிலவு மொழி
O .
ஓவியா
ஊர்வசி
ஊர்மிளா
P .
பூங்கோதை
பார்வதி
பூங்குழழி
பூங்கொடி
பொற்கொடி
பொற்கிளி
பொன்னாழி
ப்ரமோதிதா
ப்ரியா
பொன்னி
பூரணி
ப்ரீத்தா
ப்ரீத்தி
பிரியதர்ஷினி
பூர்ணா
பூஜா
புஷ்பவள்ளி
பூந்தென்றல்
புனிதா
பனிமலர்
ப்ரியம் வதனா
Q.
R .
ரம்பா
ரத்னா
ரம்யா
ரேவதி
ரேகா
ராதிகா
ரமணி
ரேணு
ரேணுகா
ரஞ்சிதா
ரஞ்சனா
ராஹினி
ராகினிஸ்ரீ
ராஜஸ்ரீ
ரதிமீனா
ரதி
S .
சிந்தாமணி
சீதா
சுப்புலக்ஷ்மி
செந்தமரைச்செல்வி
செந்தமிழ்
செந்தமிழ்ச்செல்வி
சரஸ்வதி
சிறுமலர்
ஸ்ருதி
சற்குணா
சந்தன நங்கை
சத்யபாமா
சத்யவதி
சர்வதா
சசிகலா
சசிரேகா
சைந்தவி
சிந்து
ஸ்னேஹா
சுகாஷினி
சுலோச்சனா
சாருண்யா
சரண்யா
சங்கமித்திரை
சவிதா
ஸ்ரீநிதி
சாதனா
ஸ்ரீவர்ஷினி
ஸ்ரீலேகா
சுபத்ரா
சஹானா
சித்தாரா
சுகந்தி
சுகன்யா
சர்மிளா
சர்மிளாசாந்தி
சாயா
சரளா
சுரிதா
T .
தாமரைச்செல்வி
தமிழ்ச்செம்மொழி
தாமரை
தமிழச்சி
தன்மயா
தன்ஷிகா
தமிழிசை
திலகா
தமிழ்ச்செல்வி
தென்றல்
தாரா
தாரகை
தராகி
தாரிகா
தேன்மொழி
தேனமுது
U .
உதயதர்ஷினி
உமா
உமாமகேஸ்வரி
உத்ரா
உதயா
உதயதாரா
V .
வெற்றி
வெற்றிச்செல்வி
வெண்முகில்
விழிமொழி
விண்மணி
விஜயா
வித்யா
வசந்தா
வசுந்தரா
வசுமதி
வினயா
வந்தனா
வதனா
வினோதா
வினோதினி
வைஷாலி
விமலா
வருணா
வேதா
விஷாலி
விஷாலினி
வர்ஷினி
வானதி
வாசுகி
வாசிகா
விசாகா
விதிஷா
விசித்ரா
வெண்ணிலா
வாணிஸ்ரீ
வரலக்ஷ்மி
W .
X .
Y .
யமுனா
யவனிகா
யசோதா
யோகா
யாழினி
யாத்ரா
யாழிசை
Z .