சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
இது திருப்பாவையின் முத்தாய்ப்பான பாசுரம். இதற்கு அடுத்த பாசுரம் சாற்றுமுறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. இந்த பாசுரம் வரை தன்னை ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளையாக எண்ணிக்கொண்டு ஆண்டாள் பாடினாள். அடுத்த பாசுரத்தில் பெரியாழ்வாரின் பெண்ணாக, திருப்பாவை பாசுரங்களை இயற்றிய கவியாக பலஸ்ருதி சொல்லி முடிக்கிறாள். இந்த பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்லுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான எல்லே இளங்கிளியே! பாசுரத்தில் பாகவத தாஸ்யம் சொல்லப்பட்டது. இந்த இரண்டு பாசுரங்களையுமே பூர்வாசார்யர்கள் ஆச்சர்யப்பட்டு திருப்பாவையாவது இப்பாட்டிறே! என்று புகழ்ந்தார்கள்.
ரொம்பவும் தத்துவமாகவும், கவித்துவமாகவும் சொல்லி வந்த ஆண்டாள், பகவானை நேரில் பார்த்த பரவசத்தை கடைசி ஐந்து பாசுரங்களில் வெளிப்படுத்துகிறாள். அதிலும் இந்த பாசுரம் முடிந்த முடிவாக தான் விரும்பி வந்தது என்ன என்று உடைத்து சொல்லி அவனுடைய தாஸ்யத்தை தனது பரம புருஷார்த்தமாக கேட்டுக்கொண்ட பாசுரம். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே! என்று அபராத க்ஷமாபனம் செய்து தனது முன்வினைகளை சரணாகதியின் மூலம் அழித்தது இதற்கு முந்தைய பாசுரத்தில். அந்த பாசுரத்தில் முக்கியமான வார்த்தைகள் அவை.
அதே போல் இந்த பாசுரத்திலும் இற்றைப் பறைகொள்வான் அன்று! காண், கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாமாட்செய்வோம்! என்று நாங்கள் வெறும் பறை எனும் வாத்தியத்தை பெற்றுப்போக வரவில்லை. அது ஒரு வியாஜமே! நாங்கள் வந்தது உன்னிடம் அடிமையாக இருக்கும் பெரும் பேற்றை பரம புருஷார்த்தமாக பெற்றுப்போகவே! இதை பூர்வாசார்யர்கள், ‘ஸ்ரீ பரதாழ்வானைப் போலே விஸ்லேஷித்திருக்கையன்றிக்கே, இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேணும்’ என்று தெரிவிக்கிறார்கள். பரதனைப்போலே உன்னை பிரிந்த போது, அன்னம் தண்ணீர் இல்லாது உன் பாதுகையையே நமஸ்கரித்து அதனடிவாரத்திலேயே இருந்து பக்தி பண்ணிக்கொண்டிருந்தபடி. உன்னோடு இருக்கும்போது, இளைய பெருமாளான லக்ஷ்மணனைப்போல் எல்லாவிதமான தாஸ்யங்களையும் குறைவற்று உனது திருப்திக்காகவே செய்தபடி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
எற்றைக்கும் என்பது எக்காலத்திலும் என்று ஸ்ரீவைகுண்டத்தில் அருகில் இருந்து செய்யும் தொண்டு. ஏழேழ் பிறவி என்றால், பகவான் பூமிக்கு வந்தாலும் அவனுடனே வந்து இருந்து அவன் கூடவே தொண்டு செய்தல். ஏழேழ் பிறவி என்பது எண்ணிக்கை என்று கொள்ளாமல் எத்தனை முறையானாலும் என்றே கொள்ள வேண்டும். வேறொரு விதமாகப் பார்த்தால், இனி ஒரு வேளை பிறப்பெடுக்க நேர்ந்தால், அப்போதும் உனக்கு தாஸனாகவே இருக்க வேண்டும் என்று கேட்பதாகும். மற்றை நம் காமங்களை மாற்றி உனக்கே ஆட்செய்ய அருளுவாய் என்று கர்ம வாஸனை எங்களை வேறு விஷயங்களில் இழுத்து அமிழ்த்தி விடாமல் அதிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்கள்.
இப்படி கேட்பதற்கு இந்த பாசுரத்தின் முன் பாதியில் ஒரு உறுதியை வெளிப்படுத்துகிறாள். சிற்றஞ் சிறுகாலே வந்து… என்று இளம் விடியற்காலையில் வந்து எனும்போது, அவனை தேடி அடி எடுத்து வைத்து வந்ததற்கே அவன் ரக்ஷிக்க சங்கல்பித்து விடுவனாம். பின் ‘உன்னை சேவித்து’ என்று அவனை விழுந்து வணங்கிவிட்டால், அதற்கு என்ன தரக்கூடும் என்று திகைத்துப் போவானாம் பகவான். ‘அதுக்கு மேலே ஓரஞ்சலியையும் உண்டறுக்கமாட்டாத உன்னைச் சேவித்து’ என்று பூர்வாசாரயர்கள் சொல்கிறார்கள். ‘உன் பொற்றாமரை அடியே’ என்று ஏகாரமாக இழுத்து சொல்வதால் வேறொருவரையும் நாடாமல் உன் திருவடிகளையே நாடி வந்து சேவித்து உன்னை போற்றி ஸ்தோத்திரம் செய்து, கவன ஈர்ப்பாக ‘பொருள் கேளாய்!’ என்று நாங்கள் வந்த காரியத்தை கேள் என்கிறாள்.
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து என்று சொல்லும் போது, ‘ரக்ஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தாலல்லாது தாங்களுண்ணாத குலம்’ என்று ஆயர் குலத்துக்கு உள்ள லக்ஷணத்தைப்போல் தம்மிடம் ரக்ஷணத்துக்கு வந்த ஜீவனை ரக்ஷிக்காமல் விடாத நீ, குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது! என்று உறுதியாய் சொல்கிறாள். நீ எங்களை கொள்ளாமல் விடுவது உன் ஸ்வரூபத்துக்கு விரோதமாகும். அதனால் நீ நிச்சயம் எங்களை ரக்ஷிப்பாய் என்று மஹா விஸ்வாசத்தை வெளிப்படுத்துகிறாள்.
நாங்கள் உன்னிடம் சூடகம், பாடகம் என்று என்னென்ன கேட்டாலும் கொடுத்தாய். நாங்கள் அதை மட்டுமே பெற்றுப்போக வரவில்லை. அவைகளெல்லாம் இப்போது நாங்கள் கேட்கப்போவதான மோக்ஷத்துக்கு (நீ உகக்கூடிய) சாதனங்கள். எங்களுக்கு உன்னிடம் ஸ்மரணை ஏற்படுத்துவதும், உன்னை வந்தடைவதற்கு ஏற்ற சாதனத்தைக் கொடுப்பதும், செப்பமுடைய உன் திறலால் எங்கள் சாதகத்திற்கு விரோதமாக இருப்பதை நீக்குவதும், மற்றை நம் காமங்கள் மாற்றுவதும், எங்களோடே அந்தர்யாமியாய் இருந்து தேற்றுவதும் உன் அருளாலே கிடைக்க வேண்டும். சாத்யோபாயங்களும், சித்தோபாயங்களும் எல்லாம் உன்னாலேயே கிடைக்க வேண்டும், நீயே சரணம் என்று சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!
வங்க கடல் எனும் மரக்கலங்கள் மிதக்கும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற லக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, ஆஸ்ரிதர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். பறை எனும் பரம புருஷார்த்தத்தை அவனிடமிருந்தே பெற்றார்கள். இந்த ஆற்றை – பெருஞ்செயலை பிற்காலத்தில் ஆண்டாள் அனுகரித்து, பக்தியால் உணர்ந்து பாடினாள்.
அணி புதுவை – இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஸ்ரீவில்லி புத்தூரில், பைங்கமல தண் தெரியல் என்று தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை – தன் இரண்டு தோள்கள் நான்கு தோள்களாகும் படியாக, இரண்டு கை போதாது இந்த ஆஸ்ரிதரை அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பனாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்களா சாசனம் செய்கிறாள்.
‘நற்கன்னுக்கிரங்குந்தேனு தோற்கன்னுக்குமிரங்குமாபோலே…’ என்று வியாக்கியானத்தில் சொன்னபடி, நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று சொன்னார்கள்.
இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது. நம்மால் முடியுமா என்று சந்தேகமெல்லாம் பட்டுக்கொள்ளாமல், ஆசைப்பட்டு திருப்பாவைக்கு வியாக்கியானம் எழுத ஆரம்பித்தேன். இதில் சித்தாந்த விரோதமாகவோ, ஆசார்யர் உபதேச விரோதமாகவோ, பகவத் அபசாரமோ, பாகவத அபசாரமோ, இன்னும் அறியாத வகையில் எதாவது குறைகள் இந்த உரையில் நலிந்தும் வலிந்தும் ஏற்பட்டிருக்குமேயானால், பெரியோர்கள் க்ஷமிக்க வேண்டும் என்று உளமாற சேவித்து கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருள், அவள் உகந்த செல்வத்திருமால் கண்ணனது அருள் தட்டின்றி கிடைக்கட்டும். வாழ்வில் எல்லா மங்களங்களும் அடைந்து எங்கும் அடியார்கள் ஆசார்யர்கள் தொடர்பும், சத்வ குணமும், ஐஸ்வர்யங்களும், பகவத் கிருபையும் பெற்று இன்புற வேண்டும் என்று வாழ்த்தி இந்த திருப்பாவை உரையை முடிக்கிறேன்.
இதை எழுதி விளக்கியவருக்கு நன்றி
Tuesday, July 6, 2010
Saturday, July 3, 2010
நான் செய்தவைகள் நீங்களும் செய்யலாம்
பெறுதல்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ,
தமிழ்நாடு .
அய்யா ,
பொருள்: மக்கும் தன்மையற்ற மற்றும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த தகுதியற்ற பாலிதீன் பை , மற்றும் பாலிதீன் பொருட்களை தடை செய்ய பணிவுடன் கோருதல் .
மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்கள்,
இந்த இயற்கையின் மீதும், பூமியின் மீதும் அக்கறை கொண்ட அடிப்படையில் மனிதன் என்ற முறையிலும் , இந்தியன் என்ற முறையிலும் கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் தமிழகத்தில் பிறந்ததால் தமிழன் என்ற முறையிலும், இந்த மண் வளம் பாதிப்பதை கண்டு வேதனையுறும் சமூக ஆர்வலர்களில் நானும் ஒருவன் மலை பிரதேசத்தில் பாலித்தின் பை மற்றும் பாலித்தின் பொருட்களுக்கு தடை விதித்ததை போன்று தமிழகம் முழுவதிலும் பாலித்தின் பொருட்களுக்கு தடை விதித்து . மறு சுழற்சி முறையில் பயன்படுத்தத்தக்க , மக்கும் தன்மையுள்ள மாற்று தொழில் நுட்ப பொருள்கள் தயாரிக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து உற்பத்தி செய்து பயன்பாட்டிற்கு விட மண் வளம் பாதுகாக்கபடுவதோடு இந்தியாவிலேயே பாலிதின் தடை செய்யப்பட்ட முதல் மாநிலமாக தமிழகம் விளங்க அவசர கால நடவடிக்கையாக தாங்கள் செய்து நம் மண்வளம் காக்க உதவிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் .
இப்படிக்கு
தி. சிவகுமார் .

Sunday, June 27, 2010
தேசிய கீதம் ,, தமிழ்த்தாய் வாழ்த்து
தேசிய கீதம்:::
இயற்றி இசையமைத்தவர் இரவீந்திரநாத் தாகூர்
பிறந்த தேதி 7 . 5 . 1861
பிறந்த இடம் கல்கத்தா
இறப்பு 7 . 10 . 1941
தொழில் கவிஞர்,நாடகாசிரியர்,
இசையமைப்பாளர்,
ஓவியம்.
முக்கிய விருதுகள் இலக்கியத்திற்கான
நோபல் பரிசு [ 1913 ],
நூல் கீதாஞ்சலி
பாடிமுடிப்பதற்க்கு 52 வினாடிகள்
சேர்க்கப்பட்டது 1950 .
ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ஹே
பாரத பக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே
- மகாகவி இரவீந்திரநாத தாகூர்
*****
தமிழாக்கம்
***************
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
தமிழ்த்தாய் வாழ்த்து::
நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!
அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்
தமிழணங்கே!
தமிழணங்கே!
நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே.
"மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை

Tuesday, June 15, 2010
கண்ணதாசன் கடவுளிடம் கேட்டதாகச்சொன்னது::::::
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
கண்ணதாசன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
கண்ணதாசன்
Sunday, June 6, 2010
மனிதனைப்பற்றி
உலகின் முதல் குற்றவாளி மனிதனே !
மனிதனுக்கு மனிதனே எதிரி ! ஆதி காலம் முதலாகவே தனது சுயதேவைக்காக மட்டுமே மனிதனுக்கு மனிதன் எதிரியாக வாழ பழக்கப்படுதிக்கொண்டிருந்திருகிறான்.
மரணத்தை எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் பக்குவமும் ஆறறிவாளனுக்கே!! (மனிதனுக்கே).
தனிமனித கோபமோ, போராட்டமோ, சமுதாயத்தை சீர்திருத்திவிட முடியாது, தனிமனித கட்டுப்பாடு, தனிமனித ஒழுக்கம் , மற்றும் அரசின் நெருக்கடியான சட்டத்தின் மூலமே சமூக அவலங்கள் சீர்திருத்தப்படும் .
எந்த ஒரு மனிதனும் தனக்குன்னு ஒரு சுயநலம் இல்லாமல் எந்த செயலையும் செய்றதில்லை பிச்சை போடுவது முதற்கொண்டு. உதரணமாக பிச்சை போட்டால் வாங்கிகொண்டவர்கள் வாழ்த்துவார்கள் என்றும் இதனால் தனக்கும் , தன் சந்ததிக்கும் , தான் சார்ந்து இருப்பவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்னு நம்புறான் இது நடைமுறையில் உண்மை.
நம் முன்னோர்களெல்லாம் நாம் நெறியுடன் வளரவேண்டும் என்பதற்காக , நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கின்றதென்றும் அதன் பெயர் கடவுள் என்றும் கூறி வளர்த்தார்கள் இதனால் இறை பக்தி வளர்ந்தது . சாமி சிலையை வடிக்கிறவன் மனிதன் , எந்த சாமியோட உருவம் எப்படி இருக்கணும்னு நிர்ணயம் செய்றதும் மனிதன் , அவ்வாறு வடித்த சிலையை கோவில்களில் வைத்து பூஜை செய்கிறான் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பென்று விளம்பரபடுத்துகிறான் , சிறப்பு வழிபாடு , சிறப்பு பூஜை என்றும் அவனே விளம்பரப்படுதுகிறான் . சாமி சிலையை மூலதனமாக வைத்து பணமும் , புகழும் சம்பாதிக்க நினைக்கிறான். பால், தயிர் , பழம், பஞ்சாமிர்தாம் , இளநீர் , தேன் , மஞ்சள் , சந்தனம் ,என்று சாமி சிலையில் ஊற்றி மந்திரம் தெரிந்த ஆசாமி இந்த பணியை செய்றான் , கோவிலுக்கு வெளியில் பசி, பட்னியோட நிறையபேர் பிச்சை எடுத்துட்டுருப்பாங்க ஆனால் உள்ளே பார்த்தல் உயிரற்ற கல் சிலைக்கு மேற்குறிப்பிட்ட உணவுப்பொருளால் அபிஷேகம் நடக்கும் உணவுப்பொருளை ஏன் இப்படி வீனடிக்குறாங்கன்னே புரியல ?,சாதாரண தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினால் போதும் சுத்தமாக இருப்பதற்காக !.
இன்றைக்கு இறை பக்தி அதீதமாக இருப்பவர்களில் ஒரு சிலரே உண்மையானவர்கள். நிறைய தவறு செய்ய வேண்டிய நிர்பந்தம் மனிதனுக்கு எற்பட்டுபோச்சு, அதனால சாமி கும்பிடாதவனல்லாம் நல்லவனும் கிடையாது. தானும், தனது சந்ததியும் வளமாக வாழ வேண்டும் என்பதற்காக சக மனிதனை எமாத்தியோ , லஞ்சம் வாங்கியோ ,லஞ்சம்கொடுத்தோ ,துரோகம் செய்தோ , ஏன் கொலை கூட செய்ய தயங்குவதில்லை .
இன்னும் ஒரு சில கோவில்கள்ல பார்த்திங்கனா பூசாரின்னு ஒருத்தர் இருப்பார் அவர் சட்டை போட்டிருக்கமாட்டார் , அழுக்கான வேஷ்டி தான் எப்போதும் கட்டியிருப்பார் . அது அவரோட வறுமையா கூட இருக்கலாம் அது போகட்டும் . அவர் தான் அந்த சாமிக்கு எல்லா பணிகளும் செய்வார் , அவர் வேலையே அதுவாகத்தானிருக்கும் , அந்த பூசாரிக்கோ அல்லது அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கோ , அவர்களது உடலில் சாமி புகுந்துவிட்டதாக சொல்லுவார்கள் சாமி புகுந்த அந்த பக்தரோ , பூசாரியோ தன்னை மறந்த பரவசநிலையில் ஆடுவார்கள் ,பெருமூச்சி விடுவார்கள் ,கத்துவார்கள் , ஏதேதோ பேசுவார்கள் . அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் புரியாது கோவில் பூசாரிக்கோ , அல்லது ஒருசிலருக்கோ தான் புரியும் .
இது போன்ற கோவில்களில் தான் மொட்டை அடித்தல் , காது குத்துதல் , பரிகாரம் செய்தல் போன்ற வேண்டுதல் நிறைவேற்றம் நடக்கும், இக்கோவில்களில் இருக்கும் பூசாரியிடம் பக்தர்கள் தனது குறையை கூறும்போது உடனே பூசாரிக்கு சாமி வந்து விடும் உடனே பூசாரிக்குள் இருக்கும் சாமி உனது குறையை தீர்த்து வைத்தால் ஆடு , கோழி விருந்து தறுகிறாயா?? எனக்கேட்கும் பக்தனும் அதற்க்கு தலையாட்டி சம்மதம் தெரிவிப்பான் , மொட்டை அடித்தல், காது குத்துதல் நிகழ்ச்சிகளில் கூட ஆடு, மற்றும் கோழி விருந்து நடக்கும் விருந்துக்கு தனது அண்ணன் , தம்பி, மாமன், மச்சான் ,அங்காளி , பங்காளி என அனைவரையும் கூப்பிட்டு ஒரு கூட்டமாக சாப்பிட வைத்து விட்டு பின்னர் தான் பசி, பட்டினியோடு கிழிந்த உடையணிந்த பரிதாபமாக வரிசையில் நின்று கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு போடுவான். எதுக்காக மொட்டயடிதலுக்கும், காதுகுத்தலுக்கும் ,ஆடு , கோழி வெட்டி விருந்து வைக்கிறான்னே தெரியல . அனால் ஒன்று !! தாரளமாக கறி விருந்து வைத்த மகிழ்ச்சியும் ,சாப்பிட்ட சந்தோஷமும் அவன் அடைந்திருக்கிறான் என்பது மட்டும் நல்லாபுரியுது.
தனக்கு ஒரு துன்பம்னா கடவுளுக்கு அது செய்றேன் , இது செய்றேன்னு வேண்டிக்கிறான். எந்த சாமி கேட்குது ? அது செய் , இது செய்னு .
உயிரை காப்பாத்துற கடவுளே உயிர் பலி கேட்குதுங்குறான், தப்பு பண்ணினால் கடவுள் தண்டிப்பார்னு சொல்றவனே பயப்படாமல் தவறு செய்துவிட்டு கடவுளுக்கு கமிஷன் கொடுத்து தப்பித்துவிடலாம் என்றும் நம்புறான்.
பிள்ளையார் பால் குடித்தார்னு சொன்னவனும் !,அத நம்புனவனும் !,மெனக்கெட்டு பிள்ளையாருக்கு பால் ஊட்டிவிட்ட வனும் நம்மாளுதான் !. நம்மாளு !! நம்மாளுதான் !!!
ஏசுநாதர் சிலை சிரிக்கிறது , அழுகிறது ,கண்ணில் ரத்தம் வருகிறது என்று சொன்னவனும் நம்மாளுதான் !!!
இவ்வளது சொன்ன நான் ஒரு நாத்திகனான்னு கேட்டா இல்லைனுதான் சொல்வேன் ! பகுத்தறிவாலன்னு வேணும்னா சொல்லலாம்!!, சாமி கும்பிட மாட்டேனானு கேட்டால் அதுவும் இல்லை!!! . பிள்ளையார் சுழி போட்டுதான் இதை எழுத ஆரம்பித்தேன், பகுத்தறிவாலன்னு சொன்னானே அப்புறம் ஏன் பிள்ளையார் சுழி போடுறான்னு கேட்கலாம் அது ஒன்னும் இல்ல பேனா நல்லா எழுதுதான்னு பார்க்கத்தான்!!!!...
ஜாதி,மதங்கள் மனிதனின் வாழ்வாதாரமா?

பாரதியாரை நினைவுபடுத்துவதற்காக
பிறந்த 11 - 12 - 1882
பிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டம்,
எட்டயபுரம்
தொழில் கவிஞர்,பத்திரிக்கையாசிரியர்,
எழுத்தாளர்.
இறப்பு 11 - 9 - 1921
செந்தமிழ் நாடெனும் போதினிலே -- இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே .
*****
அன்னையை வேண்டுதல்:
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் ;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் லறிவு வேண்டும் ;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய் !
*****
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
மனதில் உறுதி வேண்டும் :::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும் ,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும் ;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும் ;
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும் ;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும் ;
மண் பயனுற வேண்டும் ,
வாகன மிங்கு தென்பட வேண்டும் ;
உண்மை நின்றிட வேண்டும் ;
ஓம் ஓம் ஓம் ஓம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நெஞ்சு பொறுக்கு திலேயே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே ,
வஞ்சனைப் பேய்கள் என்பர் - இந்த
மரத்தில் என்பர்; அந்தக்குளத்தில் என்பர்;
துஞ்சுது முகட்டில் என்பர் - மிகத்
துயர்ப் படுவார்; எண்ணிப் பயப்படுவார்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அச்சமில்லை அச்சமில்லை
:::::::::::::::::::::::::::::
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்டபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்டபோதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பச்சையூ னியைந்த வேற்படைகள் வந்தபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே .
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உலகை நோக்கி:::::::::::
::::::::::::::::
நிற்பதுவே, நடப்பதுவே பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின்நீரோ? -வெறுங் காட்சிப்பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?- இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒருநினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?- அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமே? -இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையு மென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பபவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்.
******
அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
******
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
*******
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்.
*********
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2
வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5
காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6
நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7
தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8
***********
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
சரணங்கள்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் \n
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
- மகாகவி பாரதியார்...
......................................................................................
ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
சின்னஞ் சிறுகுருவி போலே -நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
கொத்தித் திரியுமந்தக் கோழி -அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் -அதற்க்
கிரக்க படவேணும் பாப்பா
பாலைப் பொழிந்துதரும், பாப்பா -அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும்நல்ல குதிரை -நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும்நம்மை ஆடு -இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு -பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும் -நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா -தாய்
சொன்ன சொல்லைத்தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி -நீ
திடங்கொண்டு போராடு பாப்பா
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா -நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே -அதை
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஇந் துத்தானம் -அதை
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா -தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு -நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில் லாதஇந் துத்தானம் -இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பர் -குலத்
தாழ்ச்சி உயற்ச்சிசொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி -அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்களிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடையநெஞ்சு வேணும் -இது
வாழும் முறைமையடி பாப்பா
Friday, May 28, 2010
குருதிமண்ணில் தமிழ் உயிர்கள் அறுவடை
புத்தகம் சுமக்கவேண்டிய கரங்கள் பிணங்கள் சுமக்கின்றன உலகில் வேறெந்த தேசத்திலும் நிகழாத நெஞ்சை உருக்கும் சம்பவம்.
Subscribe to:
Posts (Atom)