பெறுதல்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ,
தமிழ்நாடு .
அய்யா ,
பொருள்: மக்கும் தன்மையற்ற மற்றும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த தகுதியற்ற பாலிதீன் பை , மற்றும் பாலிதீன் பொருட்களை தடை செய்ய பணிவுடன் கோருதல் .
மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்கள்,
இந்த இயற்கையின் மீதும், பூமியின் மீதும் அக்கறை கொண்ட அடிப்படையில் மனிதன் என்ற முறையிலும் , இந்தியன் என்ற முறையிலும் கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் தமிழகத்தில் பிறந்ததால் தமிழன் என்ற முறையிலும், இந்த மண் வளம் பாதிப்பதை கண்டு வேதனையுறும் சமூக ஆர்வலர்களில் நானும் ஒருவன் மலை பிரதேசத்தில் பாலித்தின் பை மற்றும் பாலித்தின் பொருட்களுக்கு தடை விதித்ததை போன்று தமிழகம் முழுவதிலும் பாலித்தின் பொருட்களுக்கு தடை விதித்து . மறு சுழற்சி முறையில் பயன்படுத்தத்தக்க , மக்கும் தன்மையுள்ள மாற்று தொழில் நுட்ப பொருள்கள் தயாரிக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து உற்பத்தி செய்து பயன்பாட்டிற்கு விட மண் வளம் பாதுகாக்கபடுவதோடு இந்தியாவிலேயே பாலிதின் தடை செய்யப்பட்ட முதல் மாநிலமாக தமிழகம் விளங்க அவசர கால நடவடிக்கையாக தாங்கள் செய்து நம் மண்வளம் காக்க உதவிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் .
இப்படிக்கு
தி. சிவகுமார் .
well done anna
ReplyDelete