Tuesday, February 9, 2016

தமிழ் இந்து வில் "இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் அறிமுகம்



கடந்த ஜனவரி 3௦ (சனிக்கிழமை)  2௦16, "தமிழ் இந்து" நூல்வெளி பகுதியில் எனது நாவலை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
நன்றி தமிழ் இந்து.





புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911


Thanjavur Branch

Monday, February 8, 2016

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் குறித்து கவிஞர் யாழி கிரிதரன்.



சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது காலை பதம்பார்க்கும் ஒரு கல்லை நம்மில் எத்தனைப்பேர் எடுத்து தூர போட்டிருப்போம், நம் காயத்திற்கான மருந்திட்டு கடந்தவர்களே அதிகம். அதிலிருந்து விலகி நடந்திருக்கிறார் லஷ்மிசிவக்குமார்.

தான் சந்தித்த விபத்தை, அதிலிருந்து மீண்ட கதையை, புனைவுகளுடன் நமக்களித்த
"இப்படிக்கு... கண்ணம்மா" லஷ்மிசிவக்குமாரின் முதல் நாவல்.

இன்றைய நவீன உலகம் கட்டமைத்துள்ள வாழ்வியல் யதார்த்தங்களே கதைக்களம். முகநூல் வழி தொடங்கும் ஒரு உரையாடல் காதலாகுதல் என வழக்கம் போல் என்றாலும் அதை சொல்லும் விதத்தில் கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.

ஒரு விபத்து ஒருவனை எப்படி முடக்கும் என்பதும். அதிலிருந்து அவன் மீள்வது என்பது எவ்வளவு பெரிய துயர் என்பதைதான் வலியுருத்துகிறது இந்நாவல்.  அடிப்பட்ட ஒருவரை எப்படி தூக்க வேண்டும் எவ்வாறு கையாளவேண்டுமெனவும் பேசுகிறது இந்நாவல்.

ரத்தவகைகள், உறுப்பு தானம், உடல் தானம் பற்றி நூலில் இருந்தாலும் எங்கும் பிரச்சார நெடி அடிக்கவில்லை. போகிற போக்கில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டதிற்கு அவசியம் தேவைப்படும் குறிப்புகள் அவை.

கழிவிரக்கத்தாலோ, முகஸ்துதிக்காகவோ சொல்ல முடியத நடையில் எழுதியிருக்கும் லஷ்மி சிவக்குமாருக்கு வாழ்த்துகள்.
அதிக கதாபாத்திரங்கள் கதையோட்டத்திற்கு தடையாக இருக்கிறது அடுத்த நாவலில் பார்க்கலாம்.
அவசியம் வாசியுங்கள் அவருக்கான அடுத்த நாவலுக்கான நீர்வார்த்தல் அதுவாகத்தான் இருக்க முடியும்.

யாழி கிரிதரன் 
22/1/2015

அன்பும் நன்றியும் யாழி.


















முடிவிலி வெளியீடு,
விலை 200ரூ
9994384941

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911
Thanjavur Branch



Thursday, February 4, 2016

இப்படிக்கு... கண்ணம்மா நாவல் பற்றி ஆசிரியர் ஜெயக்குமார்

என்னுடைய முதல் நாவலான "இப்படிக்கு... கண்ணம்மா" பற்றி... ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

     சிறுவயதில் நாங்கள் பயங்கலந்த மரியாதையுடன் பார்த்து வளர்ந்தோம் இந்த ஆசிரியரைப் பார்த்து. பின்னரொரு நாளில் நான் நாவல் எழுதியிருப்பதாக என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட எங்கள் ஆசிரியர், புத்தக வெளியீட்டு தினத்தன்று வேலைப்பளு காரணமாக வர இயலவில்லை என்பதை நேரில் வந்து சொன்னதும் தான் தெரிந்தது. சாருக்கு எப்படி தெரியும் என்று.! இவர் மாணவர்களைக் கொண்டாடும் ஆசிரியர் மட்டுமல்ல. தமிழின் மீது பற்று கொண்டவர். மனிதர்களைக் கொண்டாடும் பண்பு உள்ளவர். பல பயணங்களை வகுத்துக்கொண்டு அந்த பயணத்தின் மூலம் எளிய மனிதர்களின் திறமைகளை தன்னுடைய வலைப்பூவில் பரப்புகிறார். அடிப்படையில் இவர் எங்கள் பகுதியின் இரண்டாவது புகழ் வாய்ந்த கணித ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக்க நன்றி சார்.
லக்ஷ்மி சிவக்குமார்

()()()

முடிவிலி வெளியீடு
கரந்தை,
தஞ்சாவூர்.

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911
Thanjavur Branch






நாவல் பற்றிய ஜெயக்குமார் சாரின் சுட்டி. post_6.html http://karanthaijayakumar.blogspot.com/2016/01/blog-post_6.html


அதியற்புத தருணம் :)


Tuesday, December 22, 2015

மனிதனின் மகிழ்ச்சியை நவீன தொழில்நுட்பம் அழிக்கிறது. "இப்படிக்கு... கண்ணம்மா" நூல்வெளியீட்டு விழாவில் பேச்சு

மனிதனின் மகிழ்ச்சியை நவீன தொழில்நுட்பம் அழிக்கிறது நூல்வெளியீட்டு விழாவில் பேச்சு

பதிவு செய்த நேரம்:2015-12-21 10:53:53

தஞ்சை, :  மனிதனின் மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லாவற்றையும் நவீன தொழில் நுட்பம் அழிக்கின்றது என நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் பேசினார். தஞ்சை இலக்கிய வட்டத்தின் சார்பில் இப்படிக்கு கண்ணம்மா என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா நேற்று தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் நடந்தது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் காமராசு தலைமை வகித்தார். சண்முகசுந்தரம், முருகேசன் ஆகியோர் நூல் அறிமுகம் செய்து வைத்துப் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் நூலை வெளியிட்டு பேசினார். நாவல் வாசிப்பு மிகவும் முக்கியமானது. டாக்டர்களுக்கு செய்முறை உள்ளது. பொறியாளர்கள் எவ்வாறு கட்டிடம் கட்டுவது என்பதற்கு வரையறைகள் இருக்கிறது. அதேபோல் நாவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கும் ஒரு முறை உள்ளது. நாவல் என்பது மனிதன் தன் உணர்வை அல்லது சமூக நிகழ்வுகளை எழுதுகிறான். வாசிப்பு மூலம் நாம் என்ன கற்கிறோம் என்பது தான் முக்கியமானது. மனிதனின் மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லாவற்றையும் நவீன தொழில் நுட்பம் அழிக்கின்றதுஎன்றார். டாக்டர் ராதிகாமைக்கேல், தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், மதிமுக தேர்தல் பணி செயலாளர் விடுதலை வேந்தன், தமிழாசிரியர் அர்ச்சுணன் ஆகியோர் நூல்களை பெற்றுக் கொண்டனர். தஞ்சை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் பேசினர். லட்சுமிசிவக்குமார் ஏற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க குடந்தை கோட்ட பொதுச் செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=520470&cat=504



இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது: "இப்படிக்கு... கண்ணம்மா" நூல் வெளியீட்டு விழாவில் சி.மகேந்திரன் பேச்சு. தினமணி செய்தி.

இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது: மகேந்திரன்

First Published : 21 December 2015 03:15 AM IST
இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழ் ஆசிரியருமான சி. மகேந்திரன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சை இலக்கிய வட்டத்தின் முதலாமாண்டு நிறைவு விழா, எழுத்தாளர் லஷ்மி சிவக்குமார் எழுதிய இப்படிக்கு... கண்ணம்மா என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:
இலக்கியம்தான் மனிதனை மேன்மைப்படுத்துகிறது. மனிதன் தன்னுடைய உணர்வுகள், பேராசை, அழிவு எண்ணங்கள், உலகைப் புரிந்துகொள்ள முடியாத மடைமை போன்றவற்றை அறிவதற்கு இலக்கியம் முக்கியக் கருவியாக இருக்கிறது.
இலக்கியம் படிப்பது ஏதோ பொழுதுபோக்குக்கானது என நினைப்பது தவறு. ஒரு கண்ணாடி முன் நம்மை நாமே பார்த்துக் கொள்வது போன்றது இலக்கியம்.
நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கு இலக்கியம் பயன்படுகிறது. நாம் மனிதனாக இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புவது இலக்கியம்.
நாவல் வாசிப்பு மிகவும் முக்கியமானது. மருத்துவர்களுக்கென செய்முறைகள் உள்ளன. பொறியாளர்கள் எவ்வாறு கட்டடம் கட்டுவது என்பதற்கும் வரையறைகள் இருக்கின்றன. அதேபோல, நாவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கும் ஒரு முறை உள்ளது. நாவலில் மனிதன் தன் உணர்வை அல்லது சமூக நிகழ்வுகளை எழுதுகிறான்.
வாசிப்பு மூலம் நாம் என்ன கற்கிறோம் என்பது முக்கியமானது. நம்முடன் உரையாடுதல், சண்டை போடுதல், மகிழ்ச்சி தருதல், புரியாத விஷயங்களிலிருந்து மீட்டெடுத்தல் போன்றவை நாவல் வாசிப்பு மூலம் கிடைக்கிறது.
நாவலாசிரியர் இந்த நாவலைச் சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதியுள்ளார். சமகாலத்து விஷயங்கள் பலவற்றை பதிவு செய்துள்ளார். இந்த நாவல் தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் நம்மை இழுத்துச் செல்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஏற்படும் பிரச்னைகளை பேசுகிறது என்றார் மகேந்திரன்.
தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலர் இரா. காமராசு தலைமை வகித்தார். மருத்துவர் ராதிகா மைக்கேல், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், மதிமுக தேர்தல் பணிச் செயலர் வி. விடுதலைவேந்தன், எழுத்தாளர் பசு. கெளதமன், தஞ்சை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் செ. சண்முகசுந்தரம், ஏ.ஐ.டி.யு.சி. துரை. மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

http://www.dinamani.com/edition_trichy/tanjore/2015/12/21/இலக்கியம்-மனிதனை-மேம்படுத்/article3188379.ece

இப்படிக்கு... கண்ணம்மா

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் வெளியீடு 19/12/2015 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் மாலை 6 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. முதலாமாண்டு நிறைவாக தஞ்சை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், "இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர். இரா. காமராசு தலைமை தாங்கினார். கவிஞர். கனிமொழி.ஜி.வரவேற்புரை நிகழ்த்தினார். எழுத்தாளர்கள். புலியூர் முருகேசன் மற்றும் செ.சண்முகசுந்தரம் நாவலை அறிமுகம் செய்துவைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு  உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழ் ஆசிரியருமான சி.மகேந்திரன் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மருத்துவர். ராதிகா மைக்கேல் மற்றும் தமிழாசிரியர்.மா.அர்ச்சுனன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டு பேசினார்கள். எழுத்தாளர். பசு.கவுதமன், பேரா.பி.சோமசுந்தரம், புலவர். கோ.நாகேந்திரன். ஆகியோர் வாழ்த்துரை செய்தார்கள். ம்.தி.மு.க. தேர்தல் பணிச் செயலாளர்,விடுதலை வேந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. துரை.மதிவாணன். நன்றியுரை யாற்றினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
























Wednesday, July 16, 2014

செல்பேசி


செல்பேசி

“அகிலனுக்கும் சுடர்கொடிக்கும் ஒரே மகன் கதிர். கதிர் இப்போ M.B.A HUMAN RESOURCE 1st year படிச்சிட்டு இருக்கான். இந்த படிப்புதான் படிக்கணும்னு விரும்பி எடுத்து படிச்சிட்டு இருக்கான். கொஞ்சநாளாவே அவன் யார்கூடவும் பேசறதே இல்ல. மொபைலும் கையுமாத்தான் இருந்துட்ருக்கான். ஏதாவது கேட்டா பதிலுக்கு நம்மளோட மொபைலுக்கு மெசேஜ் அனுப்பிடுறான். மொபைல் இல்லாதவங்க அவன்ட்ட பதில் எதிர்பார்க்ககூடாது. ஒரு ஸ்மைலி கண்டிப்பா இருக்கும்.

சரி வீட்லதான் இப்டின்னா காலேஜ்ல எப்டின்னு அவனோட ஃபிரண்ட்ஸ் கிட்ட கேட்டா, அவங்களும் இப்டிதான் சொல்றாங்க. யார் கூடவும் பேசறதே இல்லையாம். ஒன்லி மெசேஜ் தானாம். lecturer, h.o.d, principal கிட்ட பேசுற நிர்பந்தம் வந்தா என்ன பண்ணுவான்னு தெரியவே இல்ல.

செல்ல கைல வச்சுக்கிட்டே அடிக்கடி பாத்து பாத்துகிட்ருக்கான். அவனுக்கு ringtone mania வா இருக்கும்னு தோணுது. ஆனா அது ரொம்ப முத்திப்போனா அடுத்ததா என்ன ஸ்டேஜின்னு தெரியில. நினைக்கவே பயமா இருக்கு. எதுனால இவ்ளோ நாளா இல்லாத பயம்னா...

நேத்து ரோட்ல போயிட்டு இருந்தப்போ ஏதோ ஒரு பொண்ணு leggings போட்டுட்டு போயிருக்கா... யாரு என்ன டிரஸ் போட்டுட்டு போனா இவனுக்கு என்ன..? அந்த பொண்ண திட்டிருக்கான்.!! உடனே ஆச்சர்யப் படாதிங்க... பேசிட்டானேன்னு. அங்கதான் வில்லங்கமே ஆரம்பம்.

அவளோட மொபைல புடிங்கி, அதுலேருந்து தன்னோட மொபைலுக்கு ஒரு மிஸ்கால் குடுத்துட்டு, அந்த நம்பருக்கு மெசேஜ்ல திட்டிருக்கான். அவ cyber crime ல கம்ப்ளைன்ட் குடுத்துட்டா.. அந்த பொண்ணு கால்ல உலாத கொறையா ஒருவழியா complaint வாபஸ் வாங்கிட்டாரு அவங்க அப்பா அகிலன்.

மனநல மருத்துவர்கிட்ட போகலாம்னு கூப்டா மொறைக்கிறான். 1st year ல ஒரு VIVA டெஸ்ட் இருக்கு.
அப்புறம் 2nd year ல ஒரு VIVA டெஸ்ட் இருக்கு. இதெல்லாம் எப்டி சமாளிக்கப் போறான்னே தெரியில.
அதோட அவன் வேலைக்கு போயிதான் குடும்ப கஷ்டமெல்லாம் தீரப்போகுதுன்னு நெனச்சிட்டு இருக்காங்க அகிலனும், சுடர்கொடியும். campus இன்டெர்வியூ ல எப்டி placement ஆகப்போறான்னே தெரியில.

அகிலனுக்கும், சுடர்கொடிக்கும் மகன் இப்டி ஆகிட்டானேன்னு கவலைப்படுறதா...?
இல்ல குடும்ப கஷ்டம் இப்டியே தொடரப்போரத நெனச்சி கவலப்படுறதான்னே தெரியில.