Tuesday, December 22, 2015

மனிதனின் மகிழ்ச்சியை நவீன தொழில்நுட்பம் அழிக்கிறது. "இப்படிக்கு... கண்ணம்மா" நூல்வெளியீட்டு விழாவில் பேச்சு

மனிதனின் மகிழ்ச்சியை நவீன தொழில்நுட்பம் அழிக்கிறது நூல்வெளியீட்டு விழாவில் பேச்சு

பதிவு செய்த நேரம்:2015-12-21 10:53:53

தஞ்சை, :  மனிதனின் மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லாவற்றையும் நவீன தொழில் நுட்பம் அழிக்கின்றது என நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் பேசினார். தஞ்சை இலக்கிய வட்டத்தின் சார்பில் இப்படிக்கு கண்ணம்மா என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா நேற்று தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் நடந்தது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் காமராசு தலைமை வகித்தார். சண்முகசுந்தரம், முருகேசன் ஆகியோர் நூல் அறிமுகம் செய்து வைத்துப் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் நூலை வெளியிட்டு பேசினார். நாவல் வாசிப்பு மிகவும் முக்கியமானது. டாக்டர்களுக்கு செய்முறை உள்ளது. பொறியாளர்கள் எவ்வாறு கட்டிடம் கட்டுவது என்பதற்கு வரையறைகள் இருக்கிறது. அதேபோல் நாவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கும் ஒரு முறை உள்ளது. நாவல் என்பது மனிதன் தன் உணர்வை அல்லது சமூக நிகழ்வுகளை எழுதுகிறான். வாசிப்பு மூலம் நாம் என்ன கற்கிறோம் என்பது தான் முக்கியமானது. மனிதனின் மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லாவற்றையும் நவீன தொழில் நுட்பம் அழிக்கின்றதுஎன்றார். டாக்டர் ராதிகாமைக்கேல், தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், மதிமுக தேர்தல் பணி செயலாளர் விடுதலை வேந்தன், தமிழாசிரியர் அர்ச்சுணன் ஆகியோர் நூல்களை பெற்றுக் கொண்டனர். தஞ்சை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் பேசினர். லட்சுமிசிவக்குமார் ஏற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க குடந்தை கோட்ட பொதுச் செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=520470&cat=504



1 comment:

  1. Borgata, Atlantic City, NJ - Casino Dr
    Contact info 공주 출장마사지 for Borgata Hotel Casino and Spa in Atlantic 서울특별 출장안마 City, NJ. 서울특별 출장샵 Find reviews, hours, directions, coupons and more for 시흥 출장안마 Borgata 진주 출장마사지 Hotel Casino and Spa.

    ReplyDelete