மனிதனின் மகிழ்ச்சியை நவீன தொழில்நுட்பம் அழிக்கிறது நூல்வெளியீட்டு விழாவில் பேச்சுபதிவு செய்த நேரம்:2015-12-21 10:53:53
தஞ்சை, : மனிதனின் மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லாவற்றையும் நவீன தொழில் நுட்பம் அழிக்கின்றது என நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் பேசினார். தஞ்சை இலக்கிய வட்டத்தின் சார்பில் இப்படிக்கு கண்ணம்மா என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா நேற்று தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் நடந்தது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் காமராசு தலைமை வகித்தார். சண்முகசுந்தரம், முருகேசன் ஆகியோர் நூல் அறிமுகம் செய்து வைத்துப் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் நூலை வெளியிட்டு பேசினார். நாவல் வாசிப்பு மிகவும் முக்கியமானது. டாக்டர்களுக்கு செய்முறை உள்ளது. பொறியாளர்கள் எவ்வாறு கட்டிடம் கட்டுவது என்பதற்கு வரையறைகள் இருக்கிறது. அதேபோல் நாவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கும் ஒரு முறை உள்ளது. நாவல் என்பது மனிதன் தன் உணர்வை அல்லது சமூக நிகழ்வுகளை எழுதுகிறான். வாசிப்பு மூலம் நாம் என்ன கற்கிறோம் என்பது தான் முக்கியமானது. மனிதனின் மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லாவற்றையும் நவீன தொழில் நுட்பம் அழிக்கின்றதுஎன்றார். டாக்டர் ராதிகாமைக்கேல், தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், மதிமுக தேர்தல் பணி செயலாளர் விடுதலை வேந்தன், தமிழாசிரியர் அர்ச்சுணன் ஆகியோர் நூல்களை பெற்றுக் கொண்டனர். தஞ்சை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் பேசினர். லட்சுமிசிவக்குமார் ஏற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க குடந்தை கோட்ட பொதுச் செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=520470&cat=504
|
Tuesday, December 22, 2015
மனிதனின் மகிழ்ச்சியை நவீன தொழில்நுட்பம் அழிக்கிறது. "இப்படிக்கு... கண்ணம்மா" நூல்வெளியீட்டு விழாவில் பேச்சு
இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது: "இப்படிக்கு... கண்ணம்மா" நூல் வெளியீட்டு விழாவில் சி.மகேந்திரன் பேச்சு. தினமணி செய்தி.
இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது: மகேந்திரன்
By தஞ்சாவூர்,
First Published : 21 December 2015 03:15 AM IST
இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழ் ஆசிரியருமான சி. மகேந்திரன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சை இலக்கிய வட்டத்தின் முதலாமாண்டு நிறைவு விழா, எழுத்தாளர் லஷ்மி சிவக்குமார் எழுதிய இப்படிக்கு... கண்ணம்மா என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:
இலக்கியம்தான் மனிதனை மேன்மைப்படுத்துகிறது. மனிதன் தன்னுடைய உணர்வுகள், பேராசை, அழிவு எண்ணங்கள், உலகைப் புரிந்துகொள்ள முடியாத மடைமை போன்றவற்றை அறிவதற்கு இலக்கியம் முக்கியக் கருவியாக இருக்கிறது.
இலக்கியம் படிப்பது ஏதோ பொழுதுபோக்குக்கானது என நினைப்பது தவறு. ஒரு கண்ணாடி முன் நம்மை நாமே பார்த்துக் கொள்வது போன்றது இலக்கியம்.
நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கு இலக்கியம் பயன்படுகிறது. நாம் மனிதனாக இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புவது இலக்கியம்.
நாவல் வாசிப்பு மிகவும் முக்கியமானது. மருத்துவர்களுக்கென செய்முறைகள் உள்ளன. பொறியாளர்கள் எவ்வாறு கட்டடம் கட்டுவது என்பதற்கும் வரையறைகள் இருக்கின்றன. அதேபோல, நாவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கும் ஒரு முறை உள்ளது. நாவலில் மனிதன் தன் உணர்வை அல்லது சமூக நிகழ்வுகளை எழுதுகிறான்.
வாசிப்பு மூலம் நாம் என்ன கற்கிறோம் என்பது முக்கியமானது. நம்முடன் உரையாடுதல், சண்டை போடுதல், மகிழ்ச்சி தருதல், புரியாத விஷயங்களிலிருந்து மீட்டெடுத்தல் போன்றவை நாவல் வாசிப்பு மூலம் கிடைக்கிறது.
நாவலாசிரியர் இந்த நாவலைச் சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதியுள்ளார். சமகாலத்து விஷயங்கள் பலவற்றை பதிவு செய்துள்ளார். இந்த நாவல் தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் நம்மை இழுத்துச் செல்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஏற்படும் பிரச்னைகளை பேசுகிறது என்றார் மகேந்திரன்.
தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலர் இரா. காமராசு தலைமை வகித்தார். மருத்துவர் ராதிகா மைக்கேல், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், மதிமுக தேர்தல் பணிச் செயலர் வி. விடுதலைவேந்தன், எழுத்தாளர் பசு. கெளதமன், தஞ்சை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் செ. சண்முகசுந்தரம், ஏ.ஐ.டி.யு.சி. துரை. மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
http://www.dinamani.com/edition_trichy/tanjore/2015/12/21/இலக்கியம்-மனிதனை-மேம்படுத்/article3188379.ece
இப்படிக்கு... கண்ணம்மா
"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் வெளியீடு 19/12/2015 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் மாலை 6 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. முதலாமாண்டு நிறைவாக தஞ்சை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், "இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர். இரா. காமராசு தலைமை தாங்கினார். கவிஞர். கனிமொழி.ஜி.வரவேற்புரை நிகழ்த்தினார். எழுத்தாளர்கள். புலியூர் முருகேசன் மற்றும் செ.சண்முகசுந்தரம் நாவலை அறிமுகம் செய்துவைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழ் ஆசிரியருமான சி.மகேந்திரன் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மருத்துவர். ராதிகா மைக்கேல் மற்றும் தமிழாசிரியர்.மா.அர்ச்சுனன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டு பேசினார்கள். எழுத்தாளர். பசு.கவுதமன், பேரா.பி.சோமசுந்தரம், புலவர். கோ.நாகேந்திரன். ஆகியோர் வாழ்த்துரை செய்தார்கள். ம்.தி.மு.க. தேர்தல் பணிச் செயலாளர்,விடுதலை வேந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. துரை.மதிவாணன். நன்றியுரை யாற்றினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)