Monday, August 30, 2010

விலங்குகள் உணர்த்துபவை...

விலங்குகள் உணர்த்துபவை...


எம் இனத்தவர் ஒருவரிலிருந்து பரிணாமவளர்ச்சி அடைந்தவர்களே!   வணக்கம்.....

என்னடா வணக்கம் எல்லாம் சொல்றோமேனு பார்த்திங்களா? எல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்தது தான் ( circusla ) ...

எங்களைப்பற்றி நீங்கள் பேசிக்கொள்வது எல்லாம் எங்களுக்கு தெரியும் . எப்படின்னு கேட்கின்றீர்களா? அதுதான் கொஞ்சம் கொஞ்சமாக

நகர்ந்து உங்களுடைய வாழ்விடம் எங்கள் வாழ்விடம் நோக்கி வந்துவிட்டதே..

நாங்கள் வசிக்கும்,, நடமாடும் வனப்பகுதிகளில் நீங்கள் குடியேறிவிட்டு வனப்பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் என சொல்லிக்கொள்கின்றீர்கள்.

யாருக்கு 5 அறிவு ? யாருக்கு 6 அறிவு ? என்று தெரியவில்லை..

எங்களுக்கு பேசவும் , சிரிக்கவும் தெரியாது என்பதைத்தவிர உங்களை விட நாங்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல .

( அன்பு , பாசம் , நேசம்)

ஆனால் நீங்கள் தான் உங்கள் பசிக்காக எங்களை பிச்சை எடுக்க வைத்தீர்கள் ..

வித்தைக்கூடத்தில் அடைத்து வைத்து வேடிக்கை காட்டச்சொல்லி கைகொட்டி சிரித்தீர்கள் ...

திரைப்படங்களில் வலுக்கட்டயாமாக நடிக்க வைத்து சிரித்து ரசித்தீர்கள் ...

எங்கள் இருப்பிடத்திலேயே எங்களை வேலிகட்டி அடைத்து வைத்து எங்களை வேடிக்கை பார்த்தீர்கள் ....

வாக்குரிமை உங்களுக்கு மட்டும் என்பதாலேயோ என்னவோ பட்ஜெட்டில் எங்களுக்கான வாழ்வாதார உரிமைகள் கூட இல்லை..

நல்ல வேலை உங்களில் சிலர் எங்களின் சிரமங்களை உணர்ந்து ப்ளூ கிராஸ் போன்ற அமைப்புகளை தொடங்கி எங்களின் சிரமங்களை குறைத்தனர்....

குரல் இல்லாத எங்களுக்காக குரல் கொடுத்து எங்களை துன்பத்திலிருந்து பாதுகாத்த ஒரு புண்ணியவதிக்கு எங்களின் நன்றிகள்....

புண்ணியவதி மட்டும் எங்களுக்காக குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் எங்களுடைய உண்மைத்தன்மையை இழந்திருப்போம் .. உங்களைப்போலவே..

அய்யா /அம்மா , (என்னடா அய்யா/அம்மா என்கின்றோம்னு  பார்கிறீங்களா அது ஒன்றும் இல்லை ஆணுக்கு பெண் சரிநிகர் தானே ?) நாங்களாக யாரையும் சீண்டுவதில்லை எங்களை தற்காத்து கொள்ளவே சீண்டுவோம்...

எங்களிலும் சில முரடர்கள் இருக்கின்றனர் பிறர் சீண்டாவிடினும் சீண்டுபவர்கள் உணவிற்காக மட்டுமே...

6 அறிவு படைத்த உங்களுக்கு தெரியாதா  என்ன?

அவர்கள் விதி விலக்கானவர்கள் நீங்கள் சொல்வது போல...

எங்கள் வீடான மரங்களையும் , வனங்களையும் அழித்து நீங்கள் வீடு கட்ட பயன்படுத்திக்கொள்கின்றீர்கள்.

இந்த இயற்கை எல்லோருக்குமானதுதானே?

மரங்களும் , காடுகளும் இல்லேனா மழையும் வராது அப்புறம் தண்ணிக்கே சிரமம் தான் எங்களுக்கு மட்டும் உங்களுக்கல்ல...

நீங்க கடல் நீரை குடிநீராக்கிகொள்வீர்கள் உங்களுக்கு சிரமம் இல்லை..

ம்ம்ம் ...உங்கள்ட்ட ஒன்னு கேட்கணும்,.. எங்கள் வீடான மரங்களை உங்கள் வீட்டுக்குள்ளேயே வளர்த்துக்கிட்டு இருக்கிங்கலாமே ?( bonsai ) அப்போ உங்க வீட்டுக்குள்ள வளர்க்கிற மரங்களில் நாங்கள்  குடி ஏறிக்கொள்ளாலாமா?

ஏன் காட்டை அழிப்பானேன் ? அப்புறம் காட்டை வீட்டுக்குள் வளர்ப்பானேன்...?
அய்யா/அம்மா.(சமத்துவம்) நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்னு தான் நீங்க எங்க இடத்திற்கு வரவேண்டாம் , வந்தாலும் துன்புறுத்த வேண்டாம் . நாங்க உங்க இடத்திற்கு வரவேயில்லை ....

No comments:

Post a Comment