Friday, February 26, 2016

“தூக்கிலிடுபவரின் குறிப்புகள்”

“தூக்கிலிடுபவரின் குறிப்புகள்”



            முதலில் இந்நாவல் தமிழ்ப் படுத்தப்பட்ட  நடைமுறைகளைப் பார்த்தாள் மிக விநோதமான ஒன்றாக இருக்கிறது.

திருவிதாங்கூர் மன்னருக்காக தமிழராகிய ஜனார்த்தனன் பிள்ளை (‘பிள்ளை’ என்கிற பதம் அவர் குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதைக் குறிக்கிறதா என்கிற  தரவுகள் ஏதும் இல்லை. அது அவசியமும் இல்லை. என்றாலும் இப்படி ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை) என்பவர் குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையைச் செய்ய முன்வருகிறார்.

இவர்கள் ‘ஆரட்சர்’ குடும்பம்.  அதாவது தூக்கிலிடுபவர்கள் குடும்பம். என்பதால் இவரது தந்தையும் இதே வேலையைத்தான் செய்து வந்தார். பணி ஓய்வு பெறும் நிலையிலிருக்கும்போது தன்னுடைய மூத்த மகனாகிய ராமன் என்பவரிடம், ‘நம் குடும்பம் சார்பாக இந்த வேலையை நீ செய்கிறாயா?’ என்று கேட்கிறார். அவர் இவ்வேலை தனக்குப் பிடிக்கவில்லை என்றும், தான் தோட்டங்களிலும் கோவில்களிலும் ஏதாவது வேலைசெய்து பிழைத்துக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு, வேண்டுமானால் தன் தம்பியாகிய ஜனார்த்தனனிடம் கேளுங்கள் என்றும் சொல்கிறார். அவரும் தன்னுடைய இரண்டாவது மகனாகிய ஜனார்த்தனன் பிள்ளையிடம் கேட்க, முதலில் தயக்கம் காட்டுகிறார். பிற்காலத்தில் நிகழவிருக்கும் வறுமை, பஞ்சம் இவைகளைக் காரணம் காட்டி இவைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதை நீ ஒப்புக்கொண்டாக வேண்டும் என்றும். உன் அண்ணனாகிய ராமன் திருமணம் ஆகாதவன். அவன் வயல்களிலும், கோவில்களிலும் வேலைசெய்து பிழைத்துக்கொள்வான். அப்படித்தான் அவன் சொன்னான். என்று அறிவுறுத்திய பின்னரும், பிழைப்புச் சிரமங்களை உணர்ந்த பின்னரும் ஜனார்த்தனன் பிள்ளை இந்த வேலையை ஏற்றுக்கொள்கிறார்.

மன்னராட்சி ஒழித்துக்கட்டபட்ட பின்னரும்கூட சுதந்திர இந்தியாவிலும் பணிபுரிகிறார். 1940-லிருந்து 30ஆண்டுகள். இந்த காலங்களில் ஜனார்த்தனன் பிள்ளை 117 குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையைச் செய்திருக்கிறார்.

இதன் பின்னர் கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர் ‘சசிவாரியர்’ என்பவர் ஜனார்த்தனன் பிள்ளையைத் தேடியலைந்து கண்டுபிடித்து, அவருடைய வேலை அனுபவங்களை புத்தகமாக போடும் பொருட்டு உதவிகள் கோருகிறார். முதலில் தயங்கமும் மறுக்கவும் செய்யும் ஜனார்த்தனன் பிள்ளை பின்னர் பணம் குறித்தெல்லாம் பேசிவிட்டு, ஒரு புள்ளியில் சம்மதிக்கிறார்.

மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த ஜனார்த்தனன் பிள்ளைக்கு, எழுதுவது சிரமமான ஒன்றாக இருக்கிறது. எப்படி எழுதுவது? எங்கிருந்து தொடங்குவது? என்கிற கேள்விக்கெல்லாம்  ஆலோசனை வழங்குகிறார். பழைய நினைவுகளை மீட்டெடுத்து உங்களுக்கு நினைவினில் உள்ளவற்றை எழுதுங்கள் என்கிறார். ஜனார்த்தனன் பிள்ளையும் அவ்வாறே செய்து குறிப்பெடுக்க ஆரம்பிக்கிறார். பெரும்பாலும் கனவுகளின் மூலமாகவே குறிப்பெடுப்பதாக நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படி பழைய நினைவுகளை மீட்டெடுக்கையிலும், கனவுகளின் போது வந்து போகும் பழைய நினைவுகளும் ஜனார்த்தனன் பிள்ளையின் மனசாட்சியை ரொம்பவே உலுக்கியெடுக்க,  பல சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ளவர்களையும், எழுத்தாளரையும் சினம் கொண்டு பேசுகிறார். குடும்பத்தில் நிம்மதி இழக்கிறது. ஒரு கட்டத்தில் இனி நான் எழுதப் போவதில்லை என்றுவிட்டு எழுத்தாளர் கொடுத்துச் சொன்ற நோட்டுப் பேனாக்களை எல்லாம் எடுத்துப் போகுமாறு சொல்லிவிட்டு, தயவுசெய்து இனி இங்கு வராதீர்கள் என்றும் கடிந்து கொள்கிறார்.

அந்த எழுத்தாளர் மறுப்பேதும் சொல்லாதவராய், ஜனார்த்தனன் பிள்ளையின் டீக்கடை நண்பர் ஒருவரிடம் அவர் கொடுத்த நோட்டுப் பேனாவையும், கூடவே தன் விலாசம் எழுதப்பட்ட ஒரு தபால் அட்டையையும் கொடுத்து, ஜனார்த்தனன் வந்து எனது விலாசம் கேட்டால் இதைக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.

பின்னர் தான் எழுதியது முழுமையடையாத ஏக்கம், மற்றும் குற்ற உணர்வு ஜனார்த்தனன் பிள்ளையைத் துன்புறுத்துகிறது. அது ஏதோ ஒரு நிம்மதியற்றப் போக்கைக் கொடுக்க, தனது டீக்கடை நண்பரிடம் எழுத்தாளரின் விலாசம் கேட்கிறார். அவர் எழுத்தாளர் கொடுத்துச் சென்றவற்றைக் கொடுக்கவே மகிழ்ச்சியில் எடுத்துவந்து தன் மனதில் உள்ளனவற்றையெல்லாம் முடியுமட்டும் எழுதி எழுத்தாளரின் விலாசத்திற்கு அவர் கொடுத்துச் சென்ற கடிதத்தை அனுப்பிவைக்கிறார்.

மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட மூல நூலின் ஆசிரியரான சசிவாரியர், ஆரட்சர் ஜனார்த்தனன் பிள்ளையின், அவர் வேலை சம்பந்தப்பட்ட குறிப்புகளை, தன் புனைவுகளுடன் ஆங்கிலத்தில் ‘Hangman’s Journal’ என்கிற தலைப்பில் தனது பதிப்பகமான ‘பென்குயின்’ மூலம் வெளியிடுகிறார்.

எழுத்தாள பெருமக்களான கௌதம சித்தார்த்தன், சிவக்குமார், பிரசன்னா, இரா.முருகவேள் ஆகியோர்களின் பேருதவியினால்தான் இப்புத்தகம் தமிழில் சாத்தியப்பட்டதாக நூல் குறிப்பும் நூலாசிரியரும் சொல்கிறார்கள். நூல் தமிழ் படுத்தப்பட்டிருப்பதைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. எளிமையான, வாசிக்க இலகுவான மொழி மற்றும் நயம்.!

நூல் குறித்து முக்கியமாக ஒன்றைச் சொல்லவேண்டும். என் போன்ற புதிதாக எழுத வருபவர்கள் இந்நூலை அவசியம் வாசிக்கவேண்டும். ஏனென்றால்... மூன்றாம் வகுப்புவரையே படித்திருக்கும் ஆரட்சர் ஜனார்த்தனன் எனும் பாத்திரத்தை எழுதத்தூண்டும் எழுத்தாளரின் பாத்திரம் முக்கியம் வாய்ந்தது.

தமிழுக்கு இந்நூல் மிக அவசியமான ஆவணம்.

தமிழில் இரா.முருகவேள்.
எதிர் வெளியீடு.


லக்ஷ்மிசிவக்குமார்.
26/02/2016

தொடர்புக்கு:
Mobile: 9994384941

Sunday, February 14, 2016

"இப்படிக்கு...கண்ணம்மா" நாவலை ஆன்லைன் மூலம் பெறுவதற்கு... http://discoverybookpalace.com/products.php?product=இப்படிக்கு-கண்ணம்மா




அனைவருக்கும் வணக்கம்,

"இப்படிக்கு...கண்ணம்மா" நாவலை ஆன்லைன் மூலம் பெறுவதற்கு...
கீழே இருக்கும் "டிஸ்கவரி புக் பேலஸ்" லிங்க்கை கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
http://discoverybookpalace.com/products.php?product=இப்படிக்கு-கண்ணம்மா

Friday, February 12, 2016

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் குறித்து எழுத்தாளர் வா.மு.கோமு









     ஞ்சையிலிருந்து ஐடி கம்பெனிக்கு வேலைக்கு வந்து சேரும் சம்பத் என்கிற வாலிபனின் கதையை முழுமையாகச் சொல்லிச் செல்கிறது நாவல்நாவலில் நண்பர்கள் என்று ஒரே அறையில் தங்கியிருக்கும் சந்துருதிலக்சேகர்பிரபா என்ற நண்பர்களின் வாழ்வியல் சூழல் ஒவ்வொருவரின் பணிகள் என்று விஸ்தாரமாகச் சொல்ல விழைகிறது நாவல்.

ஆனால் சம்பத் என்கிற கதாபாத்திரம் அவர்களை மிஞ்சி நாவலில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு விவரிக்கப்படுகிறதுபோக சலிப்பின்றி நாவல் பின்பகுதியில் தான் சரளமாக செல்கிறதுநாவலாசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆரம்ப தடுமாற்றம் வாசகனை உள்ளிழுத்துக் கொள்வதில் காலதாமதம் ஆகிறதுநாவல் என்றால் அப்படித்தானப்பாஎன்று சொல்வோரும் இங்கு பலருண்டு.

சம்பத் ஆரம்ப அத்தியாயங்களிலேயே விபத்தில் அடிபட்டு மருத்துவமனை கொண்டு சேர்க்கப்படுகிறான்விபத்துகள் சாலையில் நடைபெறுவது இயற்கை சீற்றத்திற்கு ஒப்பானது தான்பின்பாக அவன் வாழ்க்கை முழுதாக விவரிக்கப்படுகிறதுஐடி கம்பெனியில் அமர்ந்து முகநூலில் கவிதை எழுதுகிறான்டிலோனி டிலக்ஸி என்கிற பெயரில் இலங்கை தமிழ்ப்பெண் ‘உங்கள் கவிதை அட்புதம்’ என்று உள்பொட்டியில் பேச வருகிறதுபின்பாக இருவரும் கவிதை பரிமாறிக் கொள்வதாகவும்டாய் டேய் என பேசிக் கொள்வதுமாக நாவல் சுறுசுறுப்படைகிறதுடிலோனி டிலக்ஸியின் வீட்டுப் பெயர் கண்ணம்மாமெதுவாக போனில் பேசிக்கொள்ளும் வரை வருகிறார்கள்.

விபத்தில் சம்பத்துக்கு முதுகுத் தண்டு வடத்தில் முறிவு ஏற்பட்டு நடக்க இயலாதவனாகி விடுகிறான்.மருத்துவமனையில் சமபந்தமாக விவரணைகள் பல சொல்லப்படுகின்றனகண்ணம்மா சம்பத்தை தேடி இலங்கையிலிருந்து வந்து சேர்கிறாள்விபத்திற்கு காரணகர்த்தாவானவர் தன் பெண்ணை சம்பத்தின் வீட்டில் அவரது குற்ற உணர்ச்சிக்காக விட்டு விட்டு செல்ல ஆசை கொள்கிறார். ’அதுக்குத்தான் நான் வந்திருக்கிறன்அந்த இடம் எனக்கு எண்டு அவரிடம் சொல்லி விடுங்கள்’ கண்ணம்மா சொல்லுமிடத்தில் நாவல் நிறைவு பெற்றதாக நான் நினைக்கிறேன்ஆனால் கதை கதையாக மேலும் தொடர்கிறது.

பெரும்பாலும் தமிழில் முந்தைய காலகட்டம் போலில்லாமல் பல வடிவங்களில் நாவல்கள் சொல்லப்படுகின்றன.நாவல் வாசிப்பாளர்களும் எப்போதையும் விட அதிகம் தமிழில் உள்ளார்கள்நாவலாசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் களங்களும் புதிது புதிதாக இருக்கிறதுமொழிபெயர்ப்புகளையே சமீப காலங்களில் வாசித்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த நாவலை வாசித்தது ஒரு புதிய அனுபவம் தான்நாவலில் சில அத்தியாயங்கள் சிறுகதைகளுக்குண்டான நேர்த்தியுடன் சொல்லப்பட்டிருக்கின்றனநாவலாசிரியர் லஷ்மி சிவக்குமாருக்கு எனது வாழ்த்துக்கள்!


இப்படிக்கு கண்ணம்மா (நாவல்விலை 200. பிரதிகள் வேண்டுவோர் பேச : 9994384941


வா.மு.கோமு.
02/02/2016
******

http://vaamukomu.blogspot.in/2016/02/blog-post.html

நன்றி ப்ரதர்

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911


Thanjavur Branch

Tuesday, February 9, 2016

தமிழ் இந்து வில் "இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் அறிமுகம்



கடந்த ஜனவரி 3௦ (சனிக்கிழமை)  2௦16, "தமிழ் இந்து" நூல்வெளி பகுதியில் எனது நாவலை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
நன்றி தமிழ் இந்து.





புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911


Thanjavur Branch

Monday, February 8, 2016

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் குறித்து கவிஞர் யாழி கிரிதரன்.



சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது காலை பதம்பார்க்கும் ஒரு கல்லை நம்மில் எத்தனைப்பேர் எடுத்து தூர போட்டிருப்போம், நம் காயத்திற்கான மருந்திட்டு கடந்தவர்களே அதிகம். அதிலிருந்து விலகி நடந்திருக்கிறார் லஷ்மிசிவக்குமார்.

தான் சந்தித்த விபத்தை, அதிலிருந்து மீண்ட கதையை, புனைவுகளுடன் நமக்களித்த
"இப்படிக்கு... கண்ணம்மா" லஷ்மிசிவக்குமாரின் முதல் நாவல்.

இன்றைய நவீன உலகம் கட்டமைத்துள்ள வாழ்வியல் யதார்த்தங்களே கதைக்களம். முகநூல் வழி தொடங்கும் ஒரு உரையாடல் காதலாகுதல் என வழக்கம் போல் என்றாலும் அதை சொல்லும் விதத்தில் கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.

ஒரு விபத்து ஒருவனை எப்படி முடக்கும் என்பதும். அதிலிருந்து அவன் மீள்வது என்பது எவ்வளவு பெரிய துயர் என்பதைதான் வலியுருத்துகிறது இந்நாவல்.  அடிப்பட்ட ஒருவரை எப்படி தூக்க வேண்டும் எவ்வாறு கையாளவேண்டுமெனவும் பேசுகிறது இந்நாவல்.

ரத்தவகைகள், உறுப்பு தானம், உடல் தானம் பற்றி நூலில் இருந்தாலும் எங்கும் பிரச்சார நெடி அடிக்கவில்லை. போகிற போக்கில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டதிற்கு அவசியம் தேவைப்படும் குறிப்புகள் அவை.

கழிவிரக்கத்தாலோ, முகஸ்துதிக்காகவோ சொல்ல முடியத நடையில் எழுதியிருக்கும் லஷ்மி சிவக்குமாருக்கு வாழ்த்துகள்.
அதிக கதாபாத்திரங்கள் கதையோட்டத்திற்கு தடையாக இருக்கிறது அடுத்த நாவலில் பார்க்கலாம்.
அவசியம் வாசியுங்கள் அவருக்கான அடுத்த நாவலுக்கான நீர்வார்த்தல் அதுவாகத்தான் இருக்க முடியும்.

யாழி கிரிதரன் 
22/1/2015

அன்பும் நன்றியும் யாழி.


















முடிவிலி வெளியீடு,
விலை 200ரூ
9994384941

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911
Thanjavur Branch



Thursday, February 4, 2016

இப்படிக்கு... கண்ணம்மா நாவல் பற்றி ஆசிரியர் ஜெயக்குமார்

என்னுடைய முதல் நாவலான "இப்படிக்கு... கண்ணம்மா" பற்றி... ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

     சிறுவயதில் நாங்கள் பயங்கலந்த மரியாதையுடன் பார்த்து வளர்ந்தோம் இந்த ஆசிரியரைப் பார்த்து. பின்னரொரு நாளில் நான் நாவல் எழுதியிருப்பதாக என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட எங்கள் ஆசிரியர், புத்தக வெளியீட்டு தினத்தன்று வேலைப்பளு காரணமாக வர இயலவில்லை என்பதை நேரில் வந்து சொன்னதும் தான் தெரிந்தது. சாருக்கு எப்படி தெரியும் என்று.! இவர் மாணவர்களைக் கொண்டாடும் ஆசிரியர் மட்டுமல்ல. தமிழின் மீது பற்று கொண்டவர். மனிதர்களைக் கொண்டாடும் பண்பு உள்ளவர். பல பயணங்களை வகுத்துக்கொண்டு அந்த பயணத்தின் மூலம் எளிய மனிதர்களின் திறமைகளை தன்னுடைய வலைப்பூவில் பரப்புகிறார். அடிப்படையில் இவர் எங்கள் பகுதியின் இரண்டாவது புகழ் வாய்ந்த கணித ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக்க நன்றி சார்.
லக்ஷ்மி சிவக்குமார்

()()()

முடிவிலி வெளியீடு
கரந்தை,
தஞ்சாவூர்.

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911
Thanjavur Branch






நாவல் பற்றிய ஜெயக்குமார் சாரின் சுட்டி. post_6.html http://karanthaijayakumar.blogspot.com/2016/01/blog-post_6.html


அதியற்புத தருணம் :)