Thursday, February 1, 2018

கீற்று இணைய தளத்தில் இப்படிக்கு... கண்ணம்மா நாவல் குறித்து முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி



மனதைக் கட்டவிழ்த்து, பரந்துபட்ட சமூக விழுமியங்களை, காத்திரமாக விரித்துக் கூறுவதில் படைப்பிலக்கியங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதிலும், ஒரு நாவல் தனக்கான காத்திரத்தன்மையை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கும். நாவலாசிரியர் லக்ஷ்மி சிவக்குமாரின் ‘இப்படிக்கு…… கண்ணம்மா’ நாவலில், கதைக்களமும் கதைமாந்தர்களின் செயல்பாடுகளும் வாசகத் தன்மையை மீறி நாவலுக்கான நுவல்பொருளை விரவிக் கொண்டே இருக்கின்றன. கதை எதை நோக்கிச் செல்கிறது என்கிற பேரார்வத்தை பெரும்பாலும் கதையின் முடிவு தீர்மானிக்கும். நவீனப் போக்கில், இந்த நாவல் முகநூலின் காதல் பரிவர்த்தனைகளால் லாக்இன் இல் தொடங்கி லோடிங்கில் இடைப்பட்டு, லாக்அவுட் இல் நிறைவடைகிறது.



மேலும் வாசிக்க... http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/34525-2018-02-01-07-02-38

நன்றி. கீற்று நந்தன்.




















நன்றி முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி

Thursday, January 18, 2018

லங்கூர் சிறுகதை புத்தகம் குறித்து கார்த்திகை பாண்டியன்

லங்கூர் சிறுகதை புத்தகம் குறித்த கார்த்திகை பாண்டியனின் பார்வை:

லக்ஷ்மி சிவக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “லங்கூர்”. யாவரும் வெளியீடு. ஏற்கனவே “இப்படிக்கு... கண்ணம்மா” என்றொரு நாவலையும் சிவக்குமார் எழுதி இருக்கிறார். பெரும்பாலான எழுத்தாளர்களின் முதல் தொகுப்பிலுள்ள கதைகள் அனேகமாகத் தன்னிலையில் எழுதப்பட்டவையாக இருக்கும். ஒரு வகையில் அதுவே எழுதுபவனுக்கு  நெருக்கமான வடிவமாகவும் இருக்கக்கூடும் . ஆனால் லக்ஷ்மி சிவக்குமாரின் கதைகள் வெகு எளிதாக இந்த நிலையைக் கடந்து செல்லும் அதே வேளையில் கதாபாத்திரங்களுக்கு மிக நெருக்கமானதாகவும் அமைகின்றன. வெவ்வேறு நிலவெளிகளையும் மனிதர்களையும் அவருடைய கதைகள் நம்முன் விரிக்கின்றன. குழந்தைகளின் அக உலகையும் நெருங்கிப் பார்க்க விழையும் கதைகள். தனக்குப் பரிச்சயமற்ற தளங்கள் உட்பட எல்லாவற்றையும் எழுதிப் பார்க்க முனையும் தைரியம் இவருடைய பலமென்றால் தேவைக்கதிகமாக நீளும் வாக்கியங்களும் முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளைக் கொண்டு கதைகளைச் சட்டென்று முடித்துக் கொள்வதும் பலவீனம் என்று சொல்லலாம். தன்னுடைய கதைகளின் வழியே தனக்கானதொரு தனித்துவமான இடத்தைக் கண்டடைவார் என்பதைச் சொல்லும் கதைகளைக் கொண்டிருக்கும் தொகுப்பு லங்கூர். 





























நண்பர் லக்ஷ்மி சிவக்குமாருக்கு வாழ்த்துகள்.


நன்றி கார்த்திகை பாண்டியன்.
லக்ஷ்மி சிவக்குமார்.
ptshivkumar76@gmail.com
mobile: 99943 84941.


புத்தக விபரம்: 

லங்கூர் 
சிறுகதைகள் 
யாவரும் பதிப்பகம், 
பதிப்பக தொடர்புக்கு : 90424 61472
பக்கம்: 154
விலை:150/-


ஆன்லைனில் எனது இரண்டு புத்தகங்களையும் வாங்க... கீழேயுள்ள லிங்க் கை சொடுக்கலாம்.

https://www.commonfolks.in/books/lakshmi-sivakumar

http://discoverybookpalace.com/products.php?product=லங்கூர்

http://discoverybookpalace.com/products.php?product=இப்படிக்கு-கண்ணம்மா

லங்கூர் சிறுகதை புத்தகம் குறித்து இரா. முருகவேள்


லங்கூர் சிறுகதை புத்தகம் குறித்து இரா. முருகவேள் அவர்களின் பார்வை. கீற்று தளத்தில்.

முன்னுரைக்கு தலைப்பு வைக்க சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. முன்னுரை என்று சொன்னாலே போதும். ஆனால் ஏனோ எனக்கு இந்த இருண்மை என்ற சொல் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

மேலும் படிக்க...




நன்றி 
இரா. முருகவேள்.
கீற்று நந்தன் 

லக்ஷ்மி சிவக்குமார்.
ptshivkumar76@gmail.com
mobile: 99943 84941.

புத்தக விபரம்: 

லங்கூர் 
சிறுகதைகள் 
யாவரும் பதிப்பகம், 
பதிப்பக தொடர்புக்கு : 90424 61472
பக்கம்: 154
விலை:150/-

ஆன்லைனில் எனது இரண்டு புத்தகங்களையும் வாங்க... கீழேயுள்ள லிங்க்கை சொடுக்கலாம்.