செல்பேசி
“அகிலனுக்கும் சுடர்கொடிக்கும் ஒரே மகன் கதிர். கதிர் இப்போ M.B.A HUMAN RESOURCE 1st year படிச்சிட்டு இருக்கான். இந்த படிப்புதான் படிக்கணும்னு விரும்பி எடுத்து படிச்சிட்டு இருக்கான். கொஞ்சநாளாவே அவன் யார்கூடவும் பேசறதே இல்ல. மொபைலும் கையுமாத்தான் இருந்துட்ருக்கான். ஏதாவது கேட்டா பதிலுக்கு நம்மளோட மொபைலுக்கு மெசேஜ் அனுப்பிடுறான். மொபைல் இல்லாதவங்க அவன்ட்ட பதில் எதிர்பார்க்ககூடாது. ஒரு ஸ்மைலி கண்டிப்பா இருக்கும்.
சரி வீட்லதான் இப்டின்னா காலேஜ்ல எப்டின்னு அவனோட ஃபிரண்ட்ஸ் கிட்ட கேட்டா, அவங்களும் இப்டிதான் சொல்றாங்க. யார் கூடவும் பேசறதே இல்லையாம். ஒன்லி மெசேஜ் தானாம். lecturer, h.o.d, principal கிட்ட பேசுற நிர்பந்தம் வந்தா என்ன பண்ணுவான்னு தெரியவே இல்ல.
செல்ல கைல வச்சுக்கிட்டே அடிக்கடி பாத்து பாத்துகிட்ருக்கான். அவனுக்கு ringtone mania வா இருக்கும்னு தோணுது. ஆனா அது ரொம்ப முத்திப்போனா அடுத்ததா என்ன ஸ்டேஜின்னு தெரியில. நினைக்கவே பயமா இருக்கு. எதுனால இவ்ளோ நாளா இல்லாத பயம்னா...
நேத்து ரோட்ல போயிட்டு இருந்தப்போ ஏதோ ஒரு பொண்ணு leggings போட்டுட்டு போயிருக்கா... யாரு என்ன டிரஸ் போட்டுட்டு போனா இவனுக்கு என்ன..? அந்த பொண்ண திட்டிருக்கான்.!! உடனே ஆச்சர்யப் படாதிங்க... பேசிட்டானேன்னு. அங்கதான் வில்லங்கமே ஆரம்பம்.
அவளோட மொபைல புடிங்கி, அதுலேருந்து தன்னோட மொபைலுக்கு ஒரு மிஸ்கால் குடுத்துட்டு, அந்த நம்பருக்கு மெசேஜ்ல திட்டிருக்கான். அவ cyber crime ல கம்ப்ளைன்ட் குடுத்துட்டா.. அந்த பொண்ணு கால்ல உலாத கொறையா ஒருவழியா complaint வாபஸ் வாங்கிட்டாரு அவங்க அப்பா அகிலன்.
மனநல மருத்துவர்கிட்ட போகலாம்னு கூப்டா மொறைக்கிறான். 1st year ல ஒரு VIVA டெஸ்ட் இருக்கு.
அப்புறம் 2nd year ல ஒரு VIVA டெஸ்ட் இருக்கு. இதெல்லாம் எப்டி சமாளிக்கப் போறான்னே தெரியில.
அதோட அவன் வேலைக்கு போயிதான் குடும்ப கஷ்டமெல்லாம் தீரப்போகுதுன்னு நெனச்சிட்டு இருக்காங்க அகிலனும், சுடர்கொடியும். campus இன்டெர்வியூ ல எப்டி placement ஆகப்போறான்னே தெரியில.
அகிலனுக்கும், சுடர்கொடிக்கும் மகன் இப்டி ஆகிட்டானேன்னு கவலைப்படுறதா...?
இல்ல குடும்ப கஷ்டம் இப்டியே தொடரப்போரத நெனச்சி கவலப்படுறதான்னே தெரியில.